Sunday, April 17, 2011

Facebook Privacy Settings -- facebook பாதுகாப்பு முறைமைகள்




பேஸ்புக் இணைய தளத்தின் பாவனை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் ஃபேஸ்புக் பாதுகாப்பு தொடர்பாகவும் ப்ரைவசி தொடர்பாகமும் அடிக்கடி சிக்கல்கள் வருவதுண்டு. 


ஃபேஸ்புக் இணைய தளத்தில் ப்ரைவசி கட்டுப்பாடுகள் அதிகமாக காணப்பட்டாலும் அவற்றினை நாங்கள் செயற்படுத்தினால் மாத்திரமே எங்களால் அவற்றை அனுபவிக்க முடியும்.ஃபேஸ்புக் இணைய தளமானது சாதாரணமாக எமது அனைத்து விடயங்களையும் உலகமே பார்க்கும் வண்ணம் திறந்துவைக்கிறது. அவற்றினை நாங்கள் எங்கள் விருப்பப்படி மாற்றியமைக்கும் போது எமது ஃபேஸ்புக் பாவனையை பாதுகாப்பாக மாற்றிக் கொள்ள முடியும்.

fb privacy main page

ஃபேஸ்புக் இணைய தளத்தில் காணப்படும் அடிப்படையான சில ப்ரைவசி முறைமைகளினை எவ்வாறு பாவிப்பது என்பதை இன்று பார்ப்போம். முதலாவதாக ஃபேஸ்புக் இணைய தளத்தின் வலது பக்க மேல் மூலையில் காணப்படும் Account என்பதினை க்ளிக் செய்து Privacy Setting என்பதனை தெரிவு செய்து கொள்ளவும். அங்கு காணப்படும் முக்கியமான நான்கு விடயங்கள் தொடர்பான விளக்கத்தினை இப்போது பார்ப்போம்.

Sharing on Facebook
இந்தப் பகுதி எமது  அடிப்படை தகவல்களினை உள்ளடக்கியதாக காணப்படுகிறது. எமது பெயர் , நண்பர்களின் விபரம், கல்வி நிலையம், வேலை பார்க்கும் இடம் , நீங்கள் விரும்பிய ஃபேஸ்புக் பக்கங்கள் போன்ற அடிப்படை விடயங்களினை எமது நண்பர் அல்லாதவர்கள் எவ்வாறு பார்க்கலாம் , பயன்படுத்தலாம் என்ற கட்டுப்பாடுகளை மேற்கொள்ள இந்த பகுதி உதவும்.

Connecting on Facebook
இந்தப் பகுதியானது நீங்கள் ஃபேஸ்புக் இணைய தளத்தில் பகிரும் விடயங்களினை யார் யார் பார்க்கலாம் என்பதினை வரையறுக்க இது பயன்படும். உதாரணமாக உங்கள் ஸ்டேடஸ் , போட்டோக்கள் , கொமன்ஸ்கள் என்பவற்றை குறிப்பிடலாம்.

Apps and Websites
இந்தப் பகுதியானது ஃபேஸ்புக்கில் நீங்கள் பயன்படுத்தும் அப்ளிகேசன்களினை கட்டுப்படுத்த உதவிசெய்கின்றது. Edit your settings என்பதினை க்ளிக் செய்து நீங்கள் பாவித்துக் கொண்டிருக்கும் அப்ளிகேசன்களினை நிறுத்தவும் அகற்றவும் முடியும். இங்கு சென்று பார்த்தால் நீங்கள் எத்தனை அப்ளிகேசன்களினை பாவிக்கிறீர்கள் என்பதினை பார்க்கலாம்.

Block Lists
இந்தப் பகுதியானது உங்களை தொல்லை செய்யும் ஃபேஸ்புக் நண்பர்களினை தடை செய்ய உதவும். உங்களுக்கு விருப்பமில்லாத நபரின் பெயர்களினை டைப் செய்வதன் மூலம் அவர்களை தடை செய்துகொள்ளலாம். மேலும் அனாவசியமாக அப்ளிகேசன்களில் இணையுமாறு அழைக்கும் நண்பர்களினையும் இங்கு தடை செய்யலாம்.
இது போன்ற அடிப்படை ப்ரைவசி பாதுகாப்பு முறைமைகளை மேற்கொள்வதன் மூலமாக உங்கள் ஃபேஸ்புக் நடவடிக்கைகளை பாதுகாத்துக் கொள்ளுங்கள். 


Saturday, April 9, 2011

முற்றிலும் மாறுபட்ட சிறந்த Mp3 மற்றும் வீடியோ Cutter

இந்த Cutter Software மற்ற மென்பொருளை விட அதிக பயன்களை  நமக்கு தருகிறது. இது அணைத்து விதமான வீடியோ Format கோப்புகளையும் வெட்டும். நமக்கு விருப்பமான வீடியோ பாடல்கள் மற்றும் நமக்கு பிடித்த வீடியோ பகுதிகளை இதை கொண்டு  வெட்டி தனியாக பிரித்து எடுக்க முடியும்.



  • MPEG4 (Moving Picture Experts Group)
  • DivX
  • WMV (Windows Media Video)
  • Quicktime MOV
  • Flash Video (*.flv)
  • MP3 (only audio)

    முதலிய Format உடைய வீடியோ கோப்புகளை வெட்ட இது Support செய்யும்.


இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்ய--  http://www.freevideocutter.com/ 
                     

Mobile Phone ன் Battery பாவணைக் காலத்தை அதிகரிக்க செய்ய வேண்டியவை







நாம் அனைவருமே மொபைல் போன்களை பயன்படுத்துகிறோம். மொபைல் போன்களில் சீக்கிரமாக செயல்யிழக்கும் பகுதிகளில் பேட்டரியும்.....ஒன்று...நான் தற்போது தாங்களுக்கு சொல்ல இருப்பது தங்கள் பேட்டரியின் உழைப்பு நாட்களை ஏப்படி அதிகரிப்பது என்று தான்..

1. மெபைல் பேனை சார்ஜ் செய்யும் போது போனை அனைத்துவிட்டு சார்ஜ் செய்தால் மிக விரைவாக சார்ஜ் செய்யபடும் மற்றும் அதிக நேரம் தாக்கு பிடிக்கும்....ஆனால் இந்த முறையை அடிக்கடி மேற்கொள்ள வேணாம்...

2.முதலில் தங்கள் போனில் உள்ள தேவையற்ற இதர இசை டோன்களை அணைத்துவிடுங்கள்....ஏனென்றால் இவை அதிக சக்தியை பயன்படுத்துகின்றன.  குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் கீபேர்ட் டோன் போன்றவை...இதை எப்படி மேற்கொள்வது என்றால் முதலில் தங்கள் மொபைல் பேனில் SETTINGS>>>TONE SETTINGS சென்று மாற்றி அமைக்கலாம்....

3. ஒரே சமயத்தில் ரிங் மற்றும் வைப்ரேட்(Vibrate) பயன்படுத்துவதை தவிருங்கள்...ஏனெனில் வைப்ரேட் அதிகமான சக்தியை செலவு செய்கிறது....இதை இரண்டுமையே பயன்படுத்தும் போது ரிங்கிங்க்கு தேவையான சக்தி மற்றும் வைப்ரேட்க்கு தேவையான சக்தி என இரண்டு ஆற்றல்கள் செயல்படுகின்றன.

4. தங்கள் போனின் திரையின் ஒளிரும் அளவை 60% மாக குறைத்துவிடுங்கள்.
Black and White போன்களில் திரையின் வகையை Normal என்பதில் வைத்துவிடுங்கள் Extended என்பதில் வேணம். ஏனெனில் இவை அதிக ஆற்றலை பயன்படுத்தும்
இதை எப்படி மேற்கொள்வது என்றால் முதலில் தங்கள் மொபைல் பேனில்SETTINGS>>>DISPLAY SETTINGS சென்று மாற்றி அமைக்கலாம்.






5. அதிகமாக Bluetooth பயன்படுத்துவதை தவிருங்கள். சிலர் BlueTooth யை கொண்டு பைல்களை பரிமாறுவதை தவிர...பிற மெசேஜ் அனுப்புவதை, மென்பொருட்களை பயன்படுத்துவது தவிருங்கள்...தேவையற்ற நேரத்தை Bluetooth செயல்பாட்டினை நிறுத்தி வையுங்கள்.

6. தங்கள் சார்ஜ்சரின் வயர்கள் சரியாக பொருத்தப்பட்டுள்ளதா என சரிபார்க்கவும்...ஏனெனில் சில சமயங்களில் சார்ஜ்ர் சார்ட் ஆக கூட வாய்ப்பு உள்ளது...பிறகு தங்கள் போனில் Charging Complete or Batter Full என வந்த உடனே சார்ஜிங்க ஓயரை துண்டிக்கவும்....இதனால் தங்கள் போன் பேட்டரியின் வெப்பநிலை கட்டுப்படுத்தபடும்....முடிந்த அளவு தரமான சார்ஜர்களையே பயன்படுத்தவும்....




7. போனை குளிர்சியான இடத்திலியே வையுங்கள்...அதிக நேரம் தொடர்ந்து  பேசுவதையும், பயன்படுத்துவதையும் தவிருங்கள்....

8.அடிக்கடி பேட்டரியை மாற்றுவது நிறுத்துங்கள்...அல்லது ஒரே பேட்டரியை கழட்டி கழட்டி மாற்றதிர்கள் அடிக்கடி...தாங்கள் புதிய பேட்டரியை வாங்க நினைத்தால் தங்கள் போனின் நிறுவனத்திடமே சென்று வாங்குங்கள்....




9.தங்கள் போனில் சிக்னல் இல்லாத சமயங்களில் போனை அனைத்துவிடுங்கள்....அதிமாக இன்டர்நென்ட் பயன்படுத்துவது குறையுங்கள்..

10. தங்கள் பேட்டரி சக்தி திறன் சிறிது குறைந்த உடனே உடனடியாக சார்ஜ் செய்வதை தவிருங்கள்..தங்கள் முழு சக்தியும் தீரும் தருவாயிலே சார்ஜ் செய்யவேண்டும்....



Friday, April 8, 2011

IPL4 T20 கிரிக்கெட் போட்டிகளை இணையத்திலும் மொபைலிலும் நேரடியாக பார்க்க..?…









கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்தியா வென்றதும் சூட்டோடு சூடாக உள்ளூர் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் 4 வது சீசன் ஏப்ரல் 8 நேற்று தொடங்கியுள்ளது. கடந்த முறை இணையத்தில் IPL கிரிக்கெட் விளையாட்டுகளை நேரலையாக யூடியுப் நிறுவனம் தனது இணையதளத்தில் Live Streaming செய்து மிகுந்த புகழை அடைந்தது. பல நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் வேலையை மறந்து IPL கிரிக்கெட்டை அலுவலகத்திலேயே திருட்டுத்தனமாக பார்த்து ரசித்தனர். ஆனால் இந்த முறை யூடியுப் இணையதளத்தோடு ஒப்பந்தம் செய்யப் படவில்லை.

சென்ற முறை கலந்து கொண்ட அணிகளோடு புதியதாக கொச்சி அணியும் புனே அணியும் சேர்ந்துள்ளன. இந்தியாவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் உரிமையை சோனியின் செட் மேக்ஸ் தொலைக்காட்சி பெற்றுள்ளது.

தொலைக்காட்சியில் பார்க்க முடியாதவர்களுக்கு ஐபிஎல் நிறுவனம் இந்தியா டைம்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறது. இதன் மூலம் லைவ் ஆக இணையதளத்தில் அனைத்து கிரிக்கெட் போட்டிகளையும் பார்க்க முடியும். மொபைலில் 3G போன்று நல்ல இண்டர்நெட் இணைப்பு இருந்தால் தாராளமாக பார்க்க முடியும்


யூடியுப் சிறப்பான சேவை தான். ஆனால் 5 நிமிடங்கள் தாமதத்தோடு தான் விளையாட்டுகள் இணையத்தில் ஒளிபரப்பப் பட்டன. ஒரு நாளைக்கு இரண்டு போட்டிகளாகவும் முதல் போட்டி மாலை 4 மணிக்கும் இரண்டாவது போட்டி இரவு 8 மணிக்கும் நடை பெறுகிறது.

இந்தியா டைம்ஸ் லைவ் கிரிக்கெட் பார்க்க : http://ipl.indiatimes.com/
மற்றபடி எப்போதும் போல ஸ்கோர்களை அறிய Cricinfo.comiplT20.com போன்ற
இணையதளங்களையும் பார்க்கலாம்.

கிரிக்கெட் போட்டிகளின் முக்கிய காட்சிகள் அல்லது ஹைலைட்ஸ் பார்க்க
யூடியுப் இன் இணையதளத்தில் அறியலாம். IPL Youtube Channel

கிரிக்கெட் போட்டிகளின் அட்டவணையைப் பார்க்க :http://accreditation.bcci.tv/iplmgr/flash/player.html

எடிசலாட் வலையமைப்பு மூலம் ஸ்கைப் நண்பர்களை அழையுங்கள்




இலங்கை கையடக்க தொலைபேசி வழங்குனர்களில் ஒன்றான எடிசலாட்(Etisalat) நிறுவனம் தற்போது புதிய சேவை ஒன்றினை தனது வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. உலகம் பூராகவும் காணப்படும் ஸ்கைப் பாவனையாளர்களினை எடிசலாட் மூலம் இணைக்கும் சேவையே இது.





உலகம் பூராகவும் காணப்படும் ஸ்கைப் நண்பர்களுக்கு 3 ரூபாய் எனும் குறைந்த கட்டணத்தில் எடிசலாட்டின் இந்த புதிய சேவையின் மூலம் அழைப்பினை மேற்கொள்ள முடியும். இவ்வாறு அழைப்பினை மேற்கொள்ள உங்கள் எடிசலாட் தொலைபேசியினூடாக நீங்கள் தொடர்புகொள்ள வேண்டியவரின் ஸ்கைப் பெயரினை 4545 எனும் இலக்கத்திற்கு SMS செய்தால் போதும்.
அவ்வாறு SMS இனை அனுப்பியதன் பின்னர் எமக்கு வழங்கப்படும் இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொண்டு 3 ரூபாய் எனும் குறைந்த கட்டணத்தில் உங்கல் ஸ்கைப் நண்பர்களுடன் பேசலாம்.

இவ்வாறு நீங்கள் அழைப்பினை மேற்கொள்ள வேண்டுமாயின் குறித்த அந்த ஸ்கைப் பாவனையாளர் etisalatlk எனும் பெயரினை தனது contact list ல் சேர்த்துக் கொள்ள வேண்டும். அல்லது ஸ்கைப் அப்ளிகேசனில் காணப்படும் Privacy settings எனும் பகுதியில் Allow any one to contact me என்பதை தெரிவு செய்து கொள்ள வேண்டும்.

மேலும் அவர்களது விளம்பரத்தில்........






Skype on Dialog: டயலொக் வலையமைப்பு மூலமாக ஸ்கைப்







உலகம் பூராகவும் உள்ள உங்கள் ஸ்கைப்(skype) நண்பர்களுடன் இனி டயலொக்(Dialog) மூலம் தொடர்பு கொள்ளுங்கள்.நிமிடத்திற்கு 2 ரூபாய் எனும் குறைந்த கட்டணத்தில் டயலொக் இந்த சேவையினை உங்களுக்கு வழங்குகின்றது. எடிசலாட் இதே சேவைக்கு நிமிடத்திற்கு 3 ரூபாய் அறவிடுவது குறிப்பிடத்தக்கது.






இந்த சேவையைப் பயன்படுத்தி உங்கள் ஸ்கைப் நண்பர்களுடன் தொடர்பினை ஏற்படுத்த இந்த இலகு செயன்முறையினை கையாளவும்.

01. skype இடைவெளி skype user id என்பவற்றை டைப் செய்து 678 எனும் இலக்கத்திற்கு அனுப்பி வைக்கவும். இந்த SMS ற்கு கட்டணம் அறவிடப்படமாட்டாது.  Ex.  skype<space>asfereseak to 678

02. நீங்கள் ஒரு குறியீட்டு இலக்கம் ஒன்றினை SMS மூலம் பெறுவீர்கள். Ex. *#52290

03. அவ்வாறு கிடைக்கப்பெற்ற இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்துவதன் மூலம் உங்கள் ஸ்கைப் நண்பருடன் தொடர்பினை ஏற்படுத்தலாம்.

இவ்வாறு பெற்ற இலக்கத்தினை save செய்து வைப்பதன் மூலம் பின்பு சாதாரணமாக தொலைபேசி அழைப்பினை மேற்கொள்வதுபோல் பயன்படுத்தலாம்.இவ்வாறு ஏற்படுத்தப்படும் அழைப்பினை பெற ஸ்கைப் அப்ளிகேசனில் காணப்படும் Privacy settings எனும் பகுதியில் Allow any one to contact me என்பதை தெரிவு செய்து கொள்ள மறக்க வேண்டாம்.



Thursday, April 7, 2011

Firefoxல் இருந்து ஒரே கிளிக்கில் Google Chrome, Internet Explorerக்கு செல்ல

இன்று வலை உலகில் எத்தனையோ, Browsers இருந்தாலும் பதிவர்கள் அதிகமாக உபயோகிப்பது பயர்பாக்ஸ் தான் ஏனென்றால் இதில் உள்ள ஆயிரக்கணக்கான நீட்சி(Addon)ஆகும். பயர்பாக்சில் பல எண்ணற்ற நீட்சிகள் இருந்தாலும் அதில் அனைவராலும் உபயோகிக்கபடுவது குறைவே. இன்று நாம் பார்க்கபோவது நீட்சி பற்றி தான். 




 நாம் இப்பொழுது பயர்பாக்சில் ஒரு தளத்தினை பார்த்து கொண்டு இருக்கிறோம் என்று வைத்துகொள்வோம். நமக்கு திடீரென்று Google Crome யை ஓபன் செய்யவேண்டும் என்றால் அதற்கு நாம் பயற்பாக்சினை minimize அல்லது close செய்து விட்டு தான் அடுத்த browser ஓபன் செய்யவேண்டும். இனி அப்படி செய்ய தேவையில்லை நீங்கள் பயர்பாக்சில் இருந்து கொண்டே எப்படி Gooogle Crome, Internet Explorer, ஓபன் செய்வதென்று கீழே பாப்போம். நான் கீழே கொடுத்துள்ள நீட்சியை கிளிக் செய்து உங்களுக்கு தேவையானதை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்


1.Google Crome -  Chrome View 0.2.0 -  

2.Internet Explorer - IE View Lite 1.3.5

3. safari -       Safari View Win 0.5.3

4.Opera  -    OperaView 0.7  

மேற்கூறிய நான்கு Browser உங்களுக்கு தேவையானதை க்ளிக் செய்து வரும் விண்டோவில் Add to Firefox என்ற பட்டனை அழுத்தவும். அடுத்து வரும் விண்டோவில் Install என்பதை கிளிக் செய்து உங்கள் பயர்பாக்சை Restart செய்யவும்.  இதை முறையே படங்களாக கீழே கொடுத்துள்ளேன்.  







அவ்வளவுதான் நீங்கள் ரீஸ்டார்ட் செய்ததும் உங்கள் மௌஸில் Right Click செய்தால் View this Page in Chrome என்று ஒரு ஆப்சன் வந்து இருக்கும். அதை கிளிக் செய்தால் உங்களுக்கு தேவையான Browser செல்லலாம்..... 



உங்கள் கணினியில் வைரஸ் புகுந்துவிட்டதா?? கணினியை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவது எப்படி


System Restore (சிஸ்டம் ரீஸ்டோர்)

வணக்கம் நண்பர்களே!   தங்கள் கணினியில் வைரஸ் புகுந்துவிட்டதா! கவலை வேண்டாம்....

என்ன தான் ஆன்டிவைரஸ் பயன்படுத்தினாலும் சில சமயம் நம் கணினியை வைரஸ் முடக்கி விடுகிறது.....

அச்சமயத்தில் தாங்கள் என்ன செய்ய முடியும்.......கவலை வேண்டாம் அதற்கு தான் System Restore
என்னும் ஒரு வழி உள்ளது...
இவ்வழி சிலருக்கு தெரிந்ததே...! ஆயினும் தெரியாதவர்களுகாக...இச்செய்தி..!






System Restore என்ற உடனே தாங்களுக்கு புரிந்து இருக்கும்....ஆம் தாங்கள் நினைத்தது சரியே!... வைரஸ்சால் முடக்கபட்ட கணினியை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவது தான்....

இதை எப்படி மேற்கொள்வது.....

முதலில் உங்கள் கணிணியை இயக்குங்கள்...உங்களுக்கு திரை வரவில்லை என்றால் Safe Mode இயக்குங்கள்... எப்படி என்றால்......உங்கள் கணினியை ஆன் செய்த உடனே F8 Key யை அழுத்துங்கள் ..உடனே ஒரு Window வரும்...அதில் Safemode  என்பதை தெர்ந்துடுங்கள்...

தற்போது...தாங்கள் கணினியில் Control Panel லை Click செய்க..பின்னர் அதில் Performance and Maintenance என்பதை Click செய்க...அதன் இடதுகை ஓரத்தில் System Restore என்பதை Clickசெய்க...தற்போது தான் கவனம் தேவை....தாங்களுக்கு தற்போது..System Restore என்னும் Window வந்துருக்கும்...






அதில் மூன்று Option கள் இருக்கும்..தாங்கள் Restore my computer to an earlier time என்பதை தேர்வு செய்யவும்...தாங்கள் தேர்வு செய்தவுடன் calender போன்று ஒரு window வரும்...அதில் தாங்கள் தங்கள் கணினியில் மாற்றங்கள் செய்த தேதிகள் மட்டும் அழுதமாக (Dark) தெரியும்..தாங்கள் அதில் எப்போது தாங்கள் கணினி நன்றாக இயங்கியதோ..அதை தேர்வு செய்து பின்னர் Next என்பதை Select செய்யவும்.






அவ்வளவு தான் தாங்கள் கணினி நீங்கள் தேர்வு செய்த தேதிக்கு சென்றுவிடும்...(Restore ur computer to tat date).. 



Wednesday, April 6, 2011

கணினியில் அழிய மறுக்கும் பைல்கள், போல்டர்களை அழிக்க வேண்டுமா!







நண்பர்களே, நமது அன்றாட கணினி சார்ந்த வாழ்வில் பல்வேறு பிரச்சனைகளை நாம் எதிரிக்கொள்ள வேண்டி உள்ளது. நாம் தற்போது காண இருக்கும் பிரச்சனை கூட பலருக்கு ஏற்ப்பட்டிருக்கும்.

அதாவது நம் கணினியில் ஏதேனும் ஓர் பைலையோ அல்லது போல்டரையோ அழிக்க முயன்றால், நம்மால் அந்த வேலையை மேற்கொள்ள முடியாது. ஏதேனும் ஓர் பிழை செய்தி தெரிவிக்கப்படும். 


உதாரணமாக நீங்கள் ஓர் பைலை அழிக்க முயன்றால், இந்த பைல் ஆனது வேறோரு பயணளார் பயன்படுத்தி கொண்டிருக்கிறார் என செய்தி கிடைக்கும், இதை கேட்டு தாங்கள் குழம்பலாம், நம்மை தவிர வேறு யாரும் பயன்படுத்தவில்லையே இருப்பினும் ஏன் இச்செய்தி வருகிறது என நினைக்கலாம்.

இந்த மாதிரி அழிய மறுக்கும் பைல்கள் தங்களின் ஹார்டிஸ்க்கில் அதிக கொள்ளளவை எடுத்து கொள்ளும் . இந்த மாதிரியை இக்கட்டான சூழ்நிலையை எப்படி எதிர்க்கொள்வது. இதற்கு தான் ஓர் அருமையான மென்பொருள் உள்ளது. இதில் தங்களின் கணினியில் அழிய மறுக்கும் பைல்களை அல்லது போல்டரை தேர்ந்தெடுத்து பின்னர் அழிக்க என்னும் முறையை தேர்ந்தெடுத்தால். அந்த பைல் அழிக்கப்படும்.
இந்த மென்பொருளின் பெயர்: NTFS UNDELETE

Download this Software பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.