Thursday, September 8, 2011

Youtube-ல் புதிய சூப்பர் ஹிட் திரைப்படங்களை இலவசமாக காண

இணையத்தில் வீடியோக்களை பகிர்ந்து கொள்ளும் தளமான Youtube தற்போது இன்னொரு புதிய சேவையை துவக்கி உள்ளது. Youtube Boxoffice என்ற புதிய பகுதியை துவக்கி உள்ளது இதன் மூலம் மாதம் ஒரு புதிய சூப்பர் ஹிட் பாலிவுட் முழு திரைப்படத்தையும்  இலவசமாக காணலாம். இதற்க்கு உலவியில்  Flash Player மென்பொருள் இணைத்து இருப்பது அவசியம். தற்போது பாலிவுட் திரைப்படங்கள் மட்டும் இதில் காண்பிக்க படுகின்றன விரைவில் தென்னிந்திய திரைப்படங்களும் இதில் இடம் பெறலாம்.







இதற்க்கு நீங்கள் எந்த வித கட்டணமும் செலுத்த தேவையில்லை. உங்கள் கணினியில் இணைய இணைப்பு நல்ல நிலையில் இருந்தாலே போதுமானது. வேறு எதுவும் நீங்கள் செய்ய தேவையில்லை. இந்த சேவையின் மூலம் கிடைக்கும் விளம்பர வருவாயை கூகுல் நிறுவனம் பட தயாரிப்பாளருக்கும் பிரித்து கொடுக்கிறது. இதனால் தயாரிப்பாளர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர். 


இந்த சேவைக்கு இன்டெல் நிறுவனம் முழு ஸ்பான்சர் செய்கிறது. ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கும் இன்டெலின் விளம்பரம் 15 நொடிகள் ஒளிபரப்பாகும். இதை உங்களால் தடுக்க முடியாது. ஒரு முழு திரைப்படத்தையும் காணும் போது சுமார் 10-12 விளம்பரங்கள் ஒளிபரப்பாகும்.

இந்த தளத்திற்கு செல்ல - youtube.com/boxoffice

Wednesday, September 7, 2011

போட்டோக்களின் தரம் சிறிதும் குறையாமல் அளவை மட்டும் குறைக்க...

நம்மிடமோ அல்லது கூகுளில் தேடியந்திரத்தில் இருந்தோ புகைப்படங்களை நாம் பற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். பிளாக்குகள்,பேஸ்புக், கூகுள் பிளஸ் போன்ற தளங்களில் புகைப்படங்களை பகிர்கிறோம். இதில் டிஜிட்டல் கேமராவில் எடுக்கப்படும் தரம் மிகுந்த போட்டோக்கள் 5mb முதல் 10mb வரை இருக்கும். இது போன்ற புகைப்படங்களை சமூக தளங்களில் அப்லோட் செய்தால் மிகவும் நேரம் எடுக்கும். மற்றும் உங்கள் பிளாக்குகளில் போட்டால் பதிவு திறப்பதற்கும் அதிக நேரம் எடுக்கும் இதனால் வாசகர்களை இழக்க நேரிடலாம். மற்றும் நீங்கள் limited band width hosting உபயோகித்தால் தேவையில்லாமல் உங்கள் பணம் தான் விரயமாகும். இந்த பிரச்சினைகளை தீர்க்க வந்துள்ளது JPEGmini என்ற புதிய online tool. website



மேலே உள்ள படத்தை பாருங்கள் 2.5 mb அளவாக இருந்த புகைப்படத்தை வெறும் 500KB யாக மாற்றி உள்ளது அதும் படத்தின் தரம் துளியும் குறையாமல்.



போட்டோவின் அளவு குறைக்கப்படும் அளவு 


8 MP and higher                                  70% - 80%
5 - 7 MP                                               60 - 75%
3 MP                                                    50 - 60%
2 MP                                                    30 - 50%
1024x768                                             25 - 35%
800x600                                               20 - 25%
640x480                                               10 - 20%



உபயோகிக்கும் முறை:
உங்களின் புகைப்படத்தை அளவை குறைக்க இந்த தளத்திற்கு JPEGmini செல்லுங்கள். அங்கு உள்ள Select Photo என்ற பட்டனை கிளிக் செய்து நீங்கள் அளவு குறைக்க வேண்டிய போட்டோவை தேர்வு செய்து கொள்ளுங்கள்.  அவ்வளுதான் உங்களுடைய போட்டோ அப்லோட் ஆகி அளவு குறைக்கப்ப பட்டு விடும்.



அடுத்து அங்கு உள்ள Download Photo என்ற பட்டனை அழுத்தி உங்களின் போட்டோக்களை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். . இதன் பிறகு வேகமாக upload செய்யலாம்


Thursday, August 18, 2011

Pen Drive and Memory card இனை கணனியில் இணைக்கும் போது கவணிக்கவேண்டியது..



Pen Drive இல் இருந்து Virus எமது கணினிக்கு வருவதென்பது நம் கவணக்குறைவால் ஏற்படக்கூடிய ஒரு பிரச்சினை,வைரஸ் கணினியை தாக்கிய பின் என்ன செய்வது என்று யோசிப்பதைவிட,வருமுன் சில நடவடிக்கைள்

 Pen Drive ஐ கணினியுடன் இணைக்கும் முன் Shift Key ஐ Press பன்னி விட்டு இணையுங்கள்,ஏனென்றால் சில வைரஸ் Auto play ஆகும்போது எமது கணினில் நிறுவப்படும்,Shift Key ஐ Press பன்னுவதன் மூலம் Auto play ஆகுவதை தடுக்கலாம்.




அடுத்து Pen Drive ஐ வழக்கமாக Right Click செய்து Open செய்வதைவிட Explore ஊடாக Pen Drive ஐ Open செய்யவும்,ஏன் என்றுசொன்னால் உங்களுடைய நண்பரின் கணினியில் இருந்து ஏதாவது ஒன்றை Pen Drive இல் சேமித்து உங்கள் கணினியில் இணைக்கும் போது உங்கள் நண்பரின் கணினியில் வைரஸ் இருந்தால் நண்பரிடம் கேட்டால் சொல்லுவர் என்னுடைய கணினியில் ஒரு வைரஸ் கூட இல்லையென்று, அவருடைய கணினியில் வைரஸ் இருந்தாலும் சரி அல்லது இல்லாவிட்டாலும் சரி எமது கணினியில் வைரஸ் வராமல் இருக்க வேண்டும் என்றால் கொஞ்சம் கவணமாகத்தான் இருக்க வேண்டும்) அந்த Pen Drive இல் வைரஸ் Auto run ஆக கணினியில் நிறுவும்படி செய்யப்பட்டிருக்கும்,நீங்கள் Open செய்ததும் உங்களை அறியாமல் வைரஸ் கணினியில் நிறுவப்பட்டுவிடும்.


இவை அனைத்தையும் விட நல்ல Virus Guard ஐ உங்கள் கணினியில் Install செய்து கொள்ளுங்கள், Installசெய்தால் மட்டும் போதுமா? அதனை Update செய்து கொள்ளுங்கள்.

Avast Update
Avira Update

உங்கள் கணனியில் Avast வேகமாக துவங்க ???



உங்களுடைய கணினியில் Avast நிறுவி இருந்தால் start windows Music சற்று தாமதமாகத்தான் வரும். இந்த பிரச்சினைக்கு காரணம் computer speed மற்றும் memory உம் தான்..இதை எப்படி Avast நிறுவதற்கு முன் உள்ளது போல அதாவது welcome என்று வரும் போதே windows start music ஒலிக்க வைப்பது என்று பார்ப்போம்.
 
Avast open செய்து setting இற்கு செல்லுங்கள்

Troubleshooting



Load avast! services only after loading other system services என்பதற்கு டிக் செய்து கொள்ளுங்கள்

அவ்வளவுதான்,உங்களுடைய கணினியை ஒரு முறை Restart செய்து பாருங்கள் இந்த பிரச்சினைக்குறிய முடிவு தெரியும்( welcome என்று வரும் போதே windows start music கேட்கும்)
 




Wednesday, August 17, 2011

நீங்கள் கணினியை இயக்கி எத்தனை நிமிடம் ஆகின்றது என்பதை அறிய


சிலர் கணினியில் இருக்கும் போது இன்றைக்கு 2 அல்லது 3 மணித்தியாலம் இருக்க வேண்டும் என்று சொல்வர்கள்.அவர்களுக்கும் மற்றும் சிலர் ஒரு நாளைக்கு தான் எத்தனை மணிநேரம் கணினியில் இருந்தோம் என்று கேட்டால் தெரியாது என்று சொல்பவர்களும் இருக்கின்றார்கள்,இப்படி பட்டவர்களுக்குத்தான் உதவும் இந்த மென்பொருள்.

இதை கணிப்பிடுவதற்காக ஒரு மென்பொருள் இருக்கின்றது இது நீங்கள் கணினியை இயக்கி எத்தை நிமிடம் என்று அல்ல மணித்தியாலயத்தையும் சொல்லும்.பாருங்கள் நீங்கள் ஒரு நாளைக்க எத்தனை மணிநேரம் கணினியில் இருக்கின்றீர்கள் என.


இந்த மென்பொருளின் அளவு 24KB தான் Download

mobile phone இற்கு புதிய வசதிகளுடனும் வேகமான opera mini..


Mobile phone இற்குறிய ஒரு மிகச்சிறந்த Browser ஆக opera mini காணப்படுகிறது.அதிலும் தற்போது வெளிவந்துள்ள opera mini 5.1 beta 10 பல புதிய வசதிகளுடன் காணப்படுகிறது.இது தமிழ் மொழியையும் ஆதரிக்கின்றது என்பது இதன் சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.(தமிழ் மொழியில் உள்ள தளங்களை பார்வை இட வேண்டுமானால் அதில் ஒரு மாற்றம் செய்ய வேண்டும்,

உங்களுடைய phone இல் www.opera.com இங்கு செல்லவும்.
opera for phones

download opera mini 5.1  (271 KB) download செய்த பிறகு 
Address Bar இல் www. ஐ அழித்து விட்டு opera:config என டைப் செய்யுங்கள்

ஆக கடைசியில்  use bitmap fonts for complex scripts  என்பது No என்று இருக்கும் அதை yes என மாற்றி விட்டு,save செய்து கொள்ளுங்கள்.
.

புதிய opera Browser இன் வசதிகள்






01.வேகமாக open  செய்து கொள்ள முடிதல் -பழையதை விட இது (opera) ஒரு வினாடியில் open ஆகிறது.


02.Number களை Type  செய்யவும் முடியும் - பழையதில் Number களை Type  செய்ய வேண்டுமாயின் ஆங்கில எமுத்துக்குப்பிறகுதான் .Number களை Type   செய்ய முடியும்.(abc, ABC) இது நமக்கு சிரமத்தை ஏற்படுத்தியது ஆனால் இந்த புதியதில் Number களுக்கு என்று வேராக  பிரிக்கப்பட்டுள்ளது(# இனை press  பன்னி மாற்றிக்கொள்ள முடியும்)


03.மிக வேகமாக download செய்து கொள்ள Download manager காணப்படுகிறது-Download செய்யும் போது Pause,Resume செய்யும் வசதி மற்றும் Download செய்த பிறகு அந்த File ஐ open செய்து கொள்ள்ளும் வசதியும் இந்த Download manager  இல் உண்டு.


04.Tab வசதி காணப்படுகிறது- இதன் மூலம் நாம் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட தளங்களை பார்வை இட முடியும்.

05.வேகமாக Browse  செய்து கொள்ளக்கூடிய வசதி .

06.zoom பன்னும் போது ஒரு அழகான effect வழங்கப்பட்டுள்ளது.

07.அழகிய தோற்றம் - பழையதை விட இது அழகாக உள்ளது.

08.Bookmark , save page போன்ற வசதிகளும் கானப்படுகிறது.


இப்படி பல வசதிகளை கொண்ட இந்த opera mini 5.1 beta 10 (அளவு 853 KB)  இனை download செய்ய  உங்கள் mobile phone  இல் இருந்து www.mobilestore.opera.com இங்கு செல்லவும்.இது கன்டிப்பாக  அனைவருக்கும் பிடிக்கும்.உங்கள் phone  இல் பயன்படுத்தி பாருங்கள். நாம் கணினியில் இருந்து  browse செய்வது போன்ற ஒரு உணர்வை தரும்.

Nokia Phone இல் Application களை Bluetooth இல் அனுப்புவது எப்படி?



நீங்கள் Nokia Phone உபயோகிப்பவராக இருந்தால் இந்த பதிவு உங்களுக்கு பயன்னுள்ளதாக அமையும் என்று நினைக்கிறேன்.சாதாரணமாக  Bluetooth இல் Music,video,image போன்றவற்றை மாத்திரமே அனுப்ப முடியும். Application களை Bluetooth அனுப்ப முடியாது.அப்படி அனுப்பினால்  "Unable to send protected object" என்ற செய்திதான் வரும்.இதனை எப்படி சரி செய்வது அதாவது  Bluetooth  மூலம் Application  அனுப்பவது எப்படி என்று பார்ப்போம்.

இதற்கு என்றுஒரு Application  இருக்கிறது, அதன் பெயர் Mobile Guard
 
இதில் பலவசதிகள் காணப்படுகின்றன குறிப்பாக சொல்லப்போனால்,

>> Bluetooth  மூலம் Application களை அனுப்ப முடியும் (Mobile Guard ஐ Open செய்து File Mgr இற்கு சென்று அனுப்புங்கள்).

>> Phone ஐ Switch on செய்யும்போது அதாவது ஆரம்பிக்கும்போது  இயங்கும் Application களை நிறுத்தும் வசதி.

>>நாம்  இணையத்தில்  வலம் வந்து கொண்டிருக்கும் போது எத்தனை Data Use பன்னி இருக்கம் என்டு மேலே காட்டிக்கொண்டு இருக்கும் அதுவும் இல்லாமல் ஒரு மாதத்திற்கு எத்தனை MB , Data Use  பன்ன வேண்டும் என்று செய்து வைக்கலாம் அதுமட்டும் இல்லாமல் எந்த எந்த Application எத்தனை சதவீதம் பாவித்து இருக்கு என்டு கூட தெரிஞ்சு கொள்ள கூடிய வசதி.

>>Phone இல் பதிந்து வைத்திருக்கும் Application பாவித்தவர்களால் வழங்கப்பட்ட மதிப்பீட்டையும் (Rating) தெரிஞ்சு கொள்ள முடியும்.

>>இன்னும் நிறைய வசதிகளை கொண்ட இந்த Application ஐ Download செய்ய http://netqin.mobi இங்கு செல்லவும்.
 

Tuesday, July 12, 2011

கணணி மிக அதிகமான வெப்பநிலைக்கு சென்றுள்ளதா?எவ்வாறு அறிவது




நாம் பயன்படுத்தும் கணணியானது குறிப்பிட்ட வெப்பநிலையில் இயங்கி வருகிறது. கணணி மிக அதிகமான வெப்பநிலைக்குச் சென்றால், அதன் காரணமாக விண்டோஸ் பூட் ஆகும் போது சிக்கல்கள் ஏற்படலாம்.
மேலும் சி.பி.யுவில் ஏதேனும் நுண்ணிய பாகங்கள் பழுதடையும் வாய்ப்பும் உள்ளது. கணணியின் வெப்பநிலையை காட்டுவதற்கு மென்பொருள்கள் நிறைய உள்ளன.

 
கணணியின் டாஸ்க் பாரை அவ்வப்போது மாறி வரும் வெப்பநிலைக்கு ஏற்றவாறு குறிப்பிட்ட வண்ணத்தில் காட்டுகிற இந்த மென்பொருளின் பெயர் Temperature Taskbar. டாஸ்க் பாரில் தோன்றும் வண்ணத்தை வைத்தே கணணியின் வெப்பநிலை சீராக உள்ளதா அல்லது அதிகமாக உள்ளதா அல்லது அபாய நிலைக்குச் சென்று விட்டதா என்று புரிந்து கொள்ள முடியும்.

இந்த மென்பொருள் மூன்று வண்ணங்களில் கணணியின் வெப்பநிலையைக் காட்டுகிறது. கணணி இயல்பாக செயல்படும் போது பச்சை வண்ணத்தில் காட்டுகிறது. வெப்பநிலை அதிகமாகும் போது ஆரஞ்சு வண்ணத்திலும், அபாய நிலைக்குச் செல்லும் போது சிகப்பு நிறத்திலும் கணணியின் டாஸ்க் பாரை மாற்றி விடுகிறது.

இந்த மென்பொருள் எளிமையாக கணணியின் வெப்பநிலையை கண்காணிக்க உதவுகிறது.

தரவிறக்க சுட்டி இங்கே கிளிக் செய்யவும்.

Wednesday, June 1, 2011

இன்டர்நெட் இணைப்பு இல்லாமல் ஜிமெயில் பார்ப்பது & அனுப்புவது எப்படி


நம்மில் பலர்  இன்டெர் நெட்  இணைப்பு இரவில் மட்டும் அல்லது குறிப்பிட்ட அளவு மாதம் குறிப்பிட்ட  KB/MB அளவு மட்டு பயன்படுத்தும் வசதி பெற்றிருப்போம் ,இத்தகைய வசதி உள்ளவர்களுக்கு இந்த Gmail Offline ல் பயன்படுத்தும் வசதி மிக மிக உபயோகமாக இருக்கும் .
நீங்கள் Internet இணைப்பு கொடுத்தவுடன் Mail கள் Desktop  வந்துவிடும்  .  இதனால் இணைப்பு இல்லாதபோதும் நாம் Mail பார்க்கலாம் .
அதேபோல இணைப்பு இல்லாதபோதும் Mail அனுப்பலாம் , அவ்வாறு அனுப்பும் மெயில் Outbox ல் தங்கிவிடும் எப்போது இணைப்பு கொடுக்கிறோமோ அப்போது mail சென்றுவிடும்
.Laptop வைத்திருப்பவர்கள் பயணம் செய்துகொண்டே Mail பார்த்து Reply கொடுக்க வசதியாக இருக்கும் ..
முதலில் உங்கள் ஜிமெயில் Login செய்து settings சென்று அதில்  Google Gears  நிறுவப்பட்டு உள்ளதா என்று பாருங்கள், இல்லாவிட்டால்
http://tools.google.com/gears சென்று  இன்ஸ்டால் செய்யுங்கள்.

பிறகு  ஜிமெயில் more>>  சென்று  Labs என்பதை தேர்வு செய்யுங்கள்
offline – enable கொடுத்து save  செய்யவும்.
பிறகு உங்கள் ஜிமெயில் inbox வந்து settings  அருகில்  உள்ள offline கிளிக் செய்து click next  கொடுக்கவும் படத்தில் கட்டியவாறு கேட்கும்  install offline access for gmail  க்கு  next button  கிளிக் செய்யவும் . அடுத்து கேட்கும்  permission  ஓகே  கொடுக்கவும்.


ஜிமெயில் உங்கள் desktop  வந்துவிடும்.
உங்கள் மெயில்கள் அனைத்தும் படத்தில் கட்டியவாறு   உங்கள் computer   க்கு download  ஆகதொடங்கும் .

இனி நீங்கள்  offline  ல் மெயில் உங்கள் கணிப்பொறியில் எப்போதுவேண்டுமானாலும்  பார்க்கலாம்./ பதில் அனுப்பலாம் …

Sunday, April 17, 2011

Facebook Privacy Settings -- facebook பாதுகாப்பு முறைமைகள்




பேஸ்புக் இணைய தளத்தின் பாவனை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் ஃபேஸ்புக் பாதுகாப்பு தொடர்பாகவும் ப்ரைவசி தொடர்பாகமும் அடிக்கடி சிக்கல்கள் வருவதுண்டு. 


ஃபேஸ்புக் இணைய தளத்தில் ப்ரைவசி கட்டுப்பாடுகள் அதிகமாக காணப்பட்டாலும் அவற்றினை நாங்கள் செயற்படுத்தினால் மாத்திரமே எங்களால் அவற்றை அனுபவிக்க முடியும்.ஃபேஸ்புக் இணைய தளமானது சாதாரணமாக எமது அனைத்து விடயங்களையும் உலகமே பார்க்கும் வண்ணம் திறந்துவைக்கிறது. அவற்றினை நாங்கள் எங்கள் விருப்பப்படி மாற்றியமைக்கும் போது எமது ஃபேஸ்புக் பாவனையை பாதுகாப்பாக மாற்றிக் கொள்ள முடியும்.

fb privacy main page

ஃபேஸ்புக் இணைய தளத்தில் காணப்படும் அடிப்படையான சில ப்ரைவசி முறைமைகளினை எவ்வாறு பாவிப்பது என்பதை இன்று பார்ப்போம். முதலாவதாக ஃபேஸ்புக் இணைய தளத்தின் வலது பக்க மேல் மூலையில் காணப்படும் Account என்பதினை க்ளிக் செய்து Privacy Setting என்பதனை தெரிவு செய்து கொள்ளவும். அங்கு காணப்படும் முக்கியமான நான்கு விடயங்கள் தொடர்பான விளக்கத்தினை இப்போது பார்ப்போம்.

Sharing on Facebook
இந்தப் பகுதி எமது  அடிப்படை தகவல்களினை உள்ளடக்கியதாக காணப்படுகிறது. எமது பெயர் , நண்பர்களின் விபரம், கல்வி நிலையம், வேலை பார்க்கும் இடம் , நீங்கள் விரும்பிய ஃபேஸ்புக் பக்கங்கள் போன்ற அடிப்படை விடயங்களினை எமது நண்பர் அல்லாதவர்கள் எவ்வாறு பார்க்கலாம் , பயன்படுத்தலாம் என்ற கட்டுப்பாடுகளை மேற்கொள்ள இந்த பகுதி உதவும்.

Connecting on Facebook
இந்தப் பகுதியானது நீங்கள் ஃபேஸ்புக் இணைய தளத்தில் பகிரும் விடயங்களினை யார் யார் பார்க்கலாம் என்பதினை வரையறுக்க இது பயன்படும். உதாரணமாக உங்கள் ஸ்டேடஸ் , போட்டோக்கள் , கொமன்ஸ்கள் என்பவற்றை குறிப்பிடலாம்.

Apps and Websites
இந்தப் பகுதியானது ஃபேஸ்புக்கில் நீங்கள் பயன்படுத்தும் அப்ளிகேசன்களினை கட்டுப்படுத்த உதவிசெய்கின்றது. Edit your settings என்பதினை க்ளிக் செய்து நீங்கள் பாவித்துக் கொண்டிருக்கும் அப்ளிகேசன்களினை நிறுத்தவும் அகற்றவும் முடியும். இங்கு சென்று பார்த்தால் நீங்கள் எத்தனை அப்ளிகேசன்களினை பாவிக்கிறீர்கள் என்பதினை பார்க்கலாம்.

Block Lists
இந்தப் பகுதியானது உங்களை தொல்லை செய்யும் ஃபேஸ்புக் நண்பர்களினை தடை செய்ய உதவும். உங்களுக்கு விருப்பமில்லாத நபரின் பெயர்களினை டைப் செய்வதன் மூலம் அவர்களை தடை செய்துகொள்ளலாம். மேலும் அனாவசியமாக அப்ளிகேசன்களில் இணையுமாறு அழைக்கும் நண்பர்களினையும் இங்கு தடை செய்யலாம்.
இது போன்ற அடிப்படை ப்ரைவசி பாதுகாப்பு முறைமைகளை மேற்கொள்வதன் மூலமாக உங்கள் ஃபேஸ்புக் நடவடிக்கைகளை பாதுகாத்துக் கொள்ளுங்கள். 


Saturday, April 9, 2011

முற்றிலும் மாறுபட்ட சிறந்த Mp3 மற்றும் வீடியோ Cutter

இந்த Cutter Software மற்ற மென்பொருளை விட அதிக பயன்களை  நமக்கு தருகிறது. இது அணைத்து விதமான வீடியோ Format கோப்புகளையும் வெட்டும். நமக்கு விருப்பமான வீடியோ பாடல்கள் மற்றும் நமக்கு பிடித்த வீடியோ பகுதிகளை இதை கொண்டு  வெட்டி தனியாக பிரித்து எடுக்க முடியும்.



  • MPEG4 (Moving Picture Experts Group)
  • DivX
  • WMV (Windows Media Video)
  • Quicktime MOV
  • Flash Video (*.flv)
  • MP3 (only audio)

    முதலிய Format உடைய வீடியோ கோப்புகளை வெட்ட இது Support செய்யும்.


இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்ய--  http://www.freevideocutter.com/ 
                     

Mobile Phone ன் Battery பாவணைக் காலத்தை அதிகரிக்க செய்ய வேண்டியவை







நாம் அனைவருமே மொபைல் போன்களை பயன்படுத்துகிறோம். மொபைல் போன்களில் சீக்கிரமாக செயல்யிழக்கும் பகுதிகளில் பேட்டரியும்.....ஒன்று...நான் தற்போது தாங்களுக்கு சொல்ல இருப்பது தங்கள் பேட்டரியின் உழைப்பு நாட்களை ஏப்படி அதிகரிப்பது என்று தான்..

1. மெபைல் பேனை சார்ஜ் செய்யும் போது போனை அனைத்துவிட்டு சார்ஜ் செய்தால் மிக விரைவாக சார்ஜ் செய்யபடும் மற்றும் அதிக நேரம் தாக்கு பிடிக்கும்....ஆனால் இந்த முறையை அடிக்கடி மேற்கொள்ள வேணாம்...

2.முதலில் தங்கள் போனில் உள்ள தேவையற்ற இதர இசை டோன்களை அணைத்துவிடுங்கள்....ஏனென்றால் இவை அதிக சக்தியை பயன்படுத்துகின்றன.  குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் கீபேர்ட் டோன் போன்றவை...இதை எப்படி மேற்கொள்வது என்றால் முதலில் தங்கள் மொபைல் பேனில் SETTINGS>>>TONE SETTINGS சென்று மாற்றி அமைக்கலாம்....

3. ஒரே சமயத்தில் ரிங் மற்றும் வைப்ரேட்(Vibrate) பயன்படுத்துவதை தவிருங்கள்...ஏனெனில் வைப்ரேட் அதிகமான சக்தியை செலவு செய்கிறது....இதை இரண்டுமையே பயன்படுத்தும் போது ரிங்கிங்க்கு தேவையான சக்தி மற்றும் வைப்ரேட்க்கு தேவையான சக்தி என இரண்டு ஆற்றல்கள் செயல்படுகின்றன.

4. தங்கள் போனின் திரையின் ஒளிரும் அளவை 60% மாக குறைத்துவிடுங்கள்.
Black and White போன்களில் திரையின் வகையை Normal என்பதில் வைத்துவிடுங்கள் Extended என்பதில் வேணம். ஏனெனில் இவை அதிக ஆற்றலை பயன்படுத்தும்
இதை எப்படி மேற்கொள்வது என்றால் முதலில் தங்கள் மொபைல் பேனில்SETTINGS>>>DISPLAY SETTINGS சென்று மாற்றி அமைக்கலாம்.






5. அதிகமாக Bluetooth பயன்படுத்துவதை தவிருங்கள். சிலர் BlueTooth யை கொண்டு பைல்களை பரிமாறுவதை தவிர...பிற மெசேஜ் அனுப்புவதை, மென்பொருட்களை பயன்படுத்துவது தவிருங்கள்...தேவையற்ற நேரத்தை Bluetooth செயல்பாட்டினை நிறுத்தி வையுங்கள்.

6. தங்கள் சார்ஜ்சரின் வயர்கள் சரியாக பொருத்தப்பட்டுள்ளதா என சரிபார்க்கவும்...ஏனெனில் சில சமயங்களில் சார்ஜ்ர் சார்ட் ஆக கூட வாய்ப்பு உள்ளது...பிறகு தங்கள் போனில் Charging Complete or Batter Full என வந்த உடனே சார்ஜிங்க ஓயரை துண்டிக்கவும்....இதனால் தங்கள் போன் பேட்டரியின் வெப்பநிலை கட்டுப்படுத்தபடும்....முடிந்த அளவு தரமான சார்ஜர்களையே பயன்படுத்தவும்....




7. போனை குளிர்சியான இடத்திலியே வையுங்கள்...அதிக நேரம் தொடர்ந்து  பேசுவதையும், பயன்படுத்துவதையும் தவிருங்கள்....

8.அடிக்கடி பேட்டரியை மாற்றுவது நிறுத்துங்கள்...அல்லது ஒரே பேட்டரியை கழட்டி கழட்டி மாற்றதிர்கள் அடிக்கடி...தாங்கள் புதிய பேட்டரியை வாங்க நினைத்தால் தங்கள் போனின் நிறுவனத்திடமே சென்று வாங்குங்கள்....




9.தங்கள் போனில் சிக்னல் இல்லாத சமயங்களில் போனை அனைத்துவிடுங்கள்....அதிமாக இன்டர்நென்ட் பயன்படுத்துவது குறையுங்கள்..

10. தங்கள் பேட்டரி சக்தி திறன் சிறிது குறைந்த உடனே உடனடியாக சார்ஜ் செய்வதை தவிருங்கள்..தங்கள் முழு சக்தியும் தீரும் தருவாயிலே சார்ஜ் செய்யவேண்டும்....