Monday, January 31, 2011

நீங்கள் அனுப்பிய மின்னஞ்சல் வாசிக்கப்பட்டாதா இல்லையா என்று அறிவது எப்படி ?




சில சந்தர்பங்களில் நாம் அனுப்பிய மின்னஞ்சல் திறந்து படிக்கப்பட்டதா அல்லது படிக்கப்படவில்லையா என்று அறிய வேண்டிய அவசியத்தில் இருப்போம் அவ்வாறு அறிவதற்கு உதவுவது தான்  SpyPic  என்ற இந்த இணையத்தளம். இது ஒரு இலவச சேவையாகும்.
இதன் மூலம் நாம் அனுப்பும் மின்னஞ்சலை எந்த நாட்டில் இருந்து எத்தனை மணிக்குப்

படிக்கிறார், எத்தனை தரம் படிக்கிறார். அவர் மின்னஞ்சலை படிக்கும் கணணியின் IP Address போன்ற தகவல்களை இந்த இணையத்தளம் உடனுக்குடன் எமக்குத் தெரியப்படுத்தும்.

இதற்கு நீங்கள் செய்யவேண்டியது மின்னஞ்சலை எழுதி முடிந்தவுடன் இந்த இணையத்தளத்துக்கு சென்று உங்கள் மினஞ்சல் முகவரியையும் உங்கள் மின்னஞ்சலுக்கான தலைப்பையும் கொடுக்க வேண்டும்

பின் Select your SpyPig tracking image என்ற இடத்தில் உள்ள எதாவது ஒரு படத்தினை தெரிவு செய்து Number of notifications to receive என்ற இடத்தில் உங்களுக்கு மின்னஞ்சல் பெறுபவர் எத்தனை முறை உங்கள் மின்னஞ்சலைப் படிக்கும் போது உங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதனையும் தெரிவு செய்யவும்

பின் கீழ் உள்ள click to activate my spypic என்ற Button ஐக் click செய்யவும் அப்போது கீழ் உள்ள பெடடியில் நீங்கள் தெரிவு செய்த படம் தோன்றும் அந்த படத்தினை ஒரு நிமிடத்துக்குள் Copy செய்து நீங்கள் அனுப்பும் மின்னஞ்சலில் ஏதாவது ஒரு இடத்தில் paste செய்து அந்த மின்னஞ்சலை சாதரண மின்னஞ்சல் போல் அனுப்பவும். அந்த மின்னஞ்சல் திறந்து படிக்கும் போது உங்களுக்கு தகவல் அனுப்பப்படும்.

தள முகவரி : http://www.spypig.com/

Notepad ஐப் பாவித்து ஒரு Folder ஐ Lock செய்வது எப்படி?

ஒரு Folder ஐ மறைத்து வைப்பதற்கு பல மென்பொருட்கள் இணையத்தில் கிடைகின்றன. இங்கு எந்த ஒரு மென்பொருளையும் பாவிக்காமல் வெறும் Notepad இனை மாத்திரம் வைத்து ஒரு Folder ஐ எவ்வாறு Lock செய்யலாம் என்று பார்ப்போம்


உதாரணமாக
உங்களிடம் tamil என்ற folder இருக்குதெனில் அந்த folder ஐ lock செய்வதற்கு பின்வரும்
வழிமுறையை பின்பற்றவும்

  • முதலில் ஒரு Notepad ஐ 
  • திறந்து அதில் பின்வருமாறு Type செய்யவும்.   ren tamil tamil.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}
  • பின் அந்த Notepad ஐ lock.bat என பெயர் கொடுத்து Save செய்யவும்.
  • பின் இன்னொரு Notepad ஐ த் திறந்து அதில் பின்வருமாறு Type செய்யவும்  ren tamil.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D} tamil
  • பின் அந்த Notepad ஐ key.bat என பெயர் கொடுத்து Save செய்யவும்.
இங்கு tamil என்பது நீங்கள் Lock செய்ய வேண்டிய Folder இன் பெயர் ஆகும். இனி குறிப்பிட்ட அந்த tamil என்ற போல்டெர் ஐ Lock செய்வதற்கு lock.bat என்ற file ஐ double click செய்தல் வேண்டும் .


Lock செய்த Folder ஐ மீண்டும் Unlock செய்வதற்கு key.bat என்ற File ஐ double click செய்தல் வேண்டும்.


இதில் கவனிக்க வேண்டியது
ஒரு விடயம் நீங்கள் folder ஐ Lock செய்யும் போது Lock செய்யும் Folder உம் lock.bat என்ற file உம் ஒரே இடத்தில் இருக்க வேண்டும். அதே போல Unlock செய்யும் போது unlock செய்யும் Folder உம் key.bat என்ற file உம் ஒரே இடத்தில் இருக்க வேண்டும்.


இனியென்ன அந்த key.bat என்ற வேறொரு Drive இல் சேமித்து விடுங்கள். அந்த File இல்லாமல் உங்கள் folder ஐ யாரும் திறக்க முடியாது .

Saturday, January 29, 2011

Hard disk இன் Free space இடத்தை அதிகாரிக்க வழி முறை.

முக்கியமான சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்யும்போது அல்லது ஏதாவது பைல்களை சேமிக்கும்போதோ டிரைவில் இடம் இல்லை என்கின்ற தகவல் வந்து நம்மை எரிச்சலுட்டும். தற்காலிகமாக நாம் இடம் ஏற்படுத்திக்கொடுத்து நிலைமையை சமாளிக்கலாம். அதை புதியவர்கள் எவ்வாறு செயல்படுத்துவது என்று இன்று பார்க்கலாம்.முதலில் ஒவ்வொரு டிரைவிலும் எவ்வளவு காலி இடம் இருக்கின்றது என்பதனை தனியே குறித்துக்கொள்ளுங்கள்.இப்போது My Computer மீது ரைட் கிளிக செய்து Properties கிளிக் செய்யுங்கள். கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.அதில் System Restore டேபை தேர்வு செய்யுங்கள்



அதில் எந்த டிரைவின் அளவை அதிகரிக்க வேண்டுமோ அதனை தேர்வு செய்யுங்கள். நான் சி - டிரைவை தேர்வு செய்துள்ளேன்.இப்போது Setttings கிளிக் செய்யுங்கள்.




வரும் விண்டோவில் Disk space to use என்பதில் உள்ள ஸ்லைடரை Max -திலிருந்து Min - க்கு கொண்டுவாருங்கள். கீழே உள்ள விண்டோ வினை பாருங்கள்





ஓ.கே. கொடுத்து பின்னர் மீண்டும் திறந்து இப்போது தேவையான அளவிற்கு ஸ்லைடரை நகர்த்துங்கள்





மீண்டும் ஓ,கே. கொடுததுவிடுங்கள் இப்போது உங்கள் டிரைவில் காலி இடம் எவ்வளவு உள்ளது என்று பாருங்கள. முதலில் குறித்த அளவையும் இதையும் ஒப்பிட்டு பாருங்கள்.நிச்சயம் காலி இடத்தின் அளவு அதிகமாக மாறிஇருக்கும். நான் விண்டோஸ் எக்ஸ்பியில் இந்த முறையை பயன்படுத்தி டிரைவின் இடத்தை அதிகரிக்கின்றேன். நீங்களும முயன்று பாருங்கள்.

 கருத்துக்களை கூறுங்கள்.






My computer இல் மறைந்து போன சிடி டிரைவை மீட்பது எப்படி?






கணிணியில் நாம் தேவையான கோப்புகளை நகலெடுக்க, படம் பார்க்க போன்ற வேலைகளை செய்ய உதவியாக இருப்பது சிடி/டிவிடி டிரைவ் ஆகும். இவை இரண்டாம் நிலை சேமிப்புச் சாதனங்கள் (Secondary storage device) எனப்படும். சில நேரங்களில் சிடி டிரைவில் எதாவது ஒரு சிடியைப்போட்டு பார்த்தால் கணிணியின் My computer இல் சிடி டிரைவ் காணாமல் போயிருக்கும். நமது சிடி டிரைவ் நல்ல நிலையில் இருந்தும் நன்றாக வெளியில் வந்து உள்ளே செல்கிற நிலை இருப்பினும் அதற்குரிய டிரைவ் கணிணியில் காட்டப்படாமல் இருக்கலாம். இதை எப்படி சரி செய்வது?

1.முதலில் Device Manager இல் சிடி டிரைவ் இயல்பு நிலையில் இருக்கிறதா என்று பாருங்கள். Device manager செல்ல டெஸ்க்டாப்பில் உள்ள My computer ஐகானை வலது கிளிக் செய்து Manage மெனுவை கிளிக் செய்யவும். அதில் இடதுபக்கமுள்ள பகுதியில் Device Manager என்பதை கிளிக் செய்தால் வலது பக்கம் நமது கணிணியில் பொருத்தப்பட்டுள்ள கருவிகளின் பட்டியல் தெரியும். அதில் DVD / Cd Rom devices என்பது Enable ஆக உள்ளதா என சோதிக்கவும்.




2.உங்கள் கணிணியின் சிபியுவில் CD/DVD Drive வை இணைக்கும் IDE Cable சரியாக உள்ளதா எனவும் உடைந்திருக்கிறதா எனவும் சரிபார்க்கவும்.

3.மேற்கண்டவை சரியாக இருந்தும் கணிணியில் சிடி டிரைவ் தெரியவில்லை என்றால் Registry இல் ஒரு மாற்றம் செய்வதன் மூலம் காணாமல் போன சிடி டிரைவை மீட்கலாம்.

Start-> Run சென்று regedit என்று தட்டச்சிட்டு எண்டர் செய்யவும். இப்போது கணிணியின் Registry Editor திறக்கப்படும். பின்னர் கீழ் உள்ள கீயை கண்டுபிடிக்கவும். நீங்கள் தேர்வு செய்த Key சரியானது தானா என்பதை உறுதி செய்ய அதன் வலதுபக்கம் சிடி/டிவிடி டிரைவ் எனக் குறிப்பிடப்பட்டிருக்கும்.

HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control\Class\{4D36E965-E325-11CE-BFC1-08002BE10318}


இந்த கீயை கிளிக் செய்து வலது பக்கம் உள்ள பட்டியலில் Upper Filters, LowerFilters ஆகிய Subkey கள் இருந்தால் இரண்டையும் அழித்துவிடவும். அழிப்பதற்கு வலது கிளிக் செய்து Delete கொடுக்கவும். ஒரு முறை கணிணியை Restart செய்து விட்டு பார்க்கவும்.

உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும் 

பேஸ்புக்கை வேகமாக பயன்படுத்த (Keyboard shortcuts)



நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வரும் சமூக வலைத்தளங்களில் (Social Networking sites) பேஸ்புக்தான் முதலிடத்தில் உள்ளது. பல சமுக வலைத் தளங்களை பின்னுக்குத் தள்ளி இந்தியாவிலும் முதலிடத்தில் இருந்த ஆர்குட் (Orkut) தளத்தையும் பின் தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளது. சிலர் காலையிலிருந்து இரவு வரை பேஸ்புக்கிலேயே தான் அரட்டையடிப்பதும் பொழுதுபோக்குவதுமாய் இருக்கின்றனர். பேஸ்புக்கை வேகமாகவும் சுலபமாகவும் பயன்படுத்த விசைப்பலகையின் குறுக்குவிசைகளைப்     (Keyboard shortcuts) பயன்படுத்தலாம்
.

கீழே உள்ள அட்டவணையில் Firefox, Chrome, Internet explorer, Safari போன்ற ஒவ்வொரு வலை உலவிக்கும் தனித்தனியே குறுக்கு விசைத் தொகுப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் நமது நேரத்தையும் வேலையையும் மிச்சப்படுத்தலாம்.

Facebook keyboard shortcuts


Function
Chrome/Opera/Safari


Firefox
Internet Explorer
Search
Alt+?
Alt+Shift+?
Alt+?+Enter
Compose New Message
Alt+M
Alt+Shift+M
Not Working
Goto Homepage
Alt+1
Alt+Shift+1
Alt+1+Enter
Go to Profile Page
Alt+2
Alt+Shift+2
Alt+2+Enter
Friend Requests
Alt+3
Alt+Shift+3
Alt+3+Enter
Open Messages
Alt+4
Alt+Shift+4
Alt+4+Enter
Notifications
Alt+5
Alt+Shift+5
Alt+5+Enter
My Account Page
Alt+6
Alt+Shift+6
Not Working
Choose Your Privacy Settings
Alt+7
Alt+Shift+7
Not Working
Facebook’s Facebook page
Alt+8
Alt+Shift+8
Alt+8+Enter
Facebook Terms & Conditions
Alt+9
Alt+Shift+9
Alt+9+Enter
Facebook Help Center
Alt+0
Alt+Shift+0
Alt+0+Enter
























Friday, January 28, 2011

உங்கள் Facebook இனை வைரஸ்களிடமிருந்து பாதுகாக்கும் அப்ளிகேஷன்


Facebook  இணைய தளத்தின் பாவனையாளர்களுக்கு BitDefender மென்பொருள் நிறுவனம் ஒரு புதிய அப்ளிகேசனினை வெளியிட்டுள்ளது. இந்த அப்ளிகேசனின் பெயர் SafeGo என்பதாகும். இந்த அப்ளிகேசனை உங்கள் Facebook  கணக்கில் நிறுவுவதன் மூலம் உங்கள்  Facebook  கணக்கின் பாதுகாப்புத்தன்மையினை உறுதி செய்து கொள்ளல்லாம்.


இந்த SafeGo அப்ளிகேஷனானது உங்கள் ஃபேஸ்புக் நண்பர்கள் பகிரும் விடயங்கள் மற்றும் இன்பொக்ஸ் போன்றவற்றினை ஸ்கான் செய்து பாதுகாப்பற்ற விடயங்களை நீக்கும் செயற்திறன் கொண்டது.SafeGo அப்ளிகேஷனின் காணப்படும் மற்றுமொரு வசதி என்னவென்றால் இது எங்கள் ப்ரைவசி செட்டிங்க்ஸ்களை ஸ்கான் செய்து எமது ஃபேஸ்புக் ப்ரைவசி தொடர்பான அறிக்கையினையும் தரவல்லது. புதிதாக Face book பாவிப்பவர்களுக்கு இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

இந்த அப்ளிகேசன் தற்போதைக்கு இலவசமாகவே BitDefender நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தாராளமாக நீங்கள் உங்கள் ஃபேஸ்புக் கணக்கினை இப்போதே ஸ்கான் செய்து பார்த்துக் கொள்ளலாம்.....