Saturday, January 22, 2011

போன் நம்பரை மாற்றாமல் நிறுவனத்தை மாற்றும் வசதி


விரும்பும் போன் நிறுவனத்திற்கு செல்போன் எண்ணை மாற்றிக் கொள்ளும் இந்த வசதியை "மொபைல் நம்பர் போர்ட்டப்ளிடி" (எம்என்பி) என்கின்றனர். இந்த வசதியை பிரதமர் மன்மோகன் சிங் நேற்று தொடங்கி வைத்தார்.

இதை பற்றிய விவரங்கள் பின்வருமாறு:


1.இந்த வசதியை பெற செல்போனில் PORT டைப்செய்து இடைவெளி விட்டு போன் நம்பர் டைப் செய்து 1900  என்ற நம்பருக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும்.

2.மாறும் குறியீட்டுடன் (யுனிக் போர்ட்டிங் கோட்) பதில் எஸ்எம்எஸ்
வரும்.மாற விரும்பும் நிறுவனத்திடம் அதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து குறியீட்டை குறிப்பிட வேண்டும்.அதனுடன் அடையாள  சான்று,முகவரி சான்று இணைத்து மாற விரும்பும் போன் நிறுவனத்திடம் அளிக்க வேண்டும்.அங்கு புதிய சிம்கார்டு தரப்படும்.

3.மாறும் நிறுவனம் செல்போனில் தொடர்பு கொண்டு தேதி,நேரத்தை கூறுவார்கள்.அந்த நாள் நேரத்துக்கு பிறகு பழைய சிம்கார்டை நீக்கி விட்டு புதிய சிம்கார்டை பொருத்த வேண்டும்.இந்த நடைமுறைகள் 7 நாட்களுக்குள் முடிவடையும்.

4.ரூ.19 கட்டணமாக பிடித்தம் செய்யப்படும்.மாறும் நிறுவனத்தின் சேவை தொடங்கும் முன் செல்போன் சேவை 2 மணிநேரம் துண்டிக்கப்படலாம்.அதுவும் இரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணிக்குள் இது நடக்கும் என்பதால் வாடிக்கையாளருக்கு பாதிப்பு இருக்காது.

5.போஸ்ட் பெய்டு வாடிக்கையாளர்கள் மற்ற ஆவணங்களுடன் கடைசியாக செலுத்திய பில் நகலையும் இணைக்க வேண்டும்.

6.ஒரு நிறுவனத்தில் இருந்து மாறிய பின் குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு வேறு நிறுவனம் மாற முடியாது.

7.நிறுவனம் மாறும்போது ப்ரீபெய்டு இணைப்பில் பாக்கித் தொகை இருந்தால்,புதிய நிறுவன இணைப்பு பெறும்போது அது காலாவதி ஆகிவிடும்..

No comments:

Post a Comment