Tuesday, March 1, 2011

Tower இல்லாமல் செயல்படும் மொபைல் போன் கண்டுபிடிப்பு




மொபைல்போன் டவர்கள் மூலமாக சிக்னல்களை பெற்று தான் தற்போது மொபைல் போன்கள் இயங்கி வருகின்றன. டவர்கள் இல்லாவிட்டால் மொபைல் போன்கள் இயங்காது. ஆனால் அமெரிக்க விஞ்ஞானிகள் டவர்கள் இல்லாமலேயே செயல்படக் கூடிய நவீன செல்போன் தொழில் நுட்பத்தை அவர்கள் உருவாக்கி உள்ளனர். பிளைண்டர்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தலைமையில் செயல்படும் சர்வதேச குழு Software ஒன்றை உருவாக்கி உள்ளது.
இந்த Software அழைப்புகளை ஒரு மொபைல் போனில் இருந்து இன்னொரு மொபைல் போனுக்கு ரிலே செய்ய உதவும். இதன் மூலம் டவர்கள் இல்லாமலேயே செல்போன்கள் இயங்கும். ஒரே ஒரு ஆபரேடிவ் டவர் மட்டும் இருக்கும். அதோடு எல்லா மொபைல் போன்களும் இணைக்கப்பட்டு இருக்கும். செயல்படும் (ஒப்பிரேடிவ்) டவர் இல்லாத பகுதிகளுக்கு மொபைல் போன்களில் இருந்து சிக்னல்கள் பெறப்பட்டு அவை சிக்னல்கள் மூலமாகவே அஞ்சல் செய்ய இந்த நவீனSoftware  உதவும்.


No comments:

Post a Comment