உலகின் புதிய 10 அதிசயங்களை 10 கோடி பேர் சேர்ந்து இணையதளத்தில் ஓட்டுப்போட்டு தேர்ந்து எடுத்தனர்.
உலகின் புதிய 10 அதிசயங்களை 10 கோடி பேர் சேர்ந்து இணையதளத்தில் ஓட்டுப்போட்டு தேர்ந்து எடுத்தனர். இந்த உலக அதிசயங்களை தேர்வு செய்ய நடந்த கருத்துக்கணிப்புக்கு தொடக்கத்தில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. யுனெஸ்கோ அமைப்பு இந்த வாக்கெடுப்புக்கு கண்டனம் தெரிவித்தது.
உலக அதிசயங்களை ஓட்டுப்போட்டு தேர்ந்து எடுப்பது சரி அல்ல என்று அது கருத்து தெரிவித்தது. மேலும் இந்த கருத்துக்கணிப்பு மூலம் பெருமளவில் பணமுறைகேடுகள் நடப்பதாகவும், மக்களின் பணத்தை சுரண்டும் முயற்சி என்றும் சர்ச்சைகள் எழுந்தன.
இந்த சர்ச்சைகளுக்கு மத்தியிலும் கருத்துக்கணிப்பு நடந்து முடிந்துள்ளது. இதில் இந்தியாவின் தாஜ்மகால் முதலிடத்தை பிடித்துள்ளது.
2-வது இடத்தை சீனப்பெருஞ்சுவர் பிடித்தது. ஜோர்டானின் பெட்ரா, பிரேசிலின் ரியோ டிஜெனீரோ நகரில் மலை உச்சியில் உள்ள பிரமாண்ட இயேசு நாதர் சிலை, பெரு நாட்டின் மச்சு பிச்சு, மெக்சிகோவின் மயன் கட்டிடங்கள், ரோம் நகரின் கொலேசியம் என்று மற்ற அதிசயங்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment