Sunday, January 23, 2011

பலமான Password ஐ உருவாக்குதல் எவ்வாறு ???


உங்களால் இலகுவில் ஞாபகப்படுத்திக் கொள்ளக்கூடியதும், ஏனையோரால் இலகுவில் ஊகிக்க முடியாததுமான Password ஏ பாதுகாப்பான Password என்ற வகைக்குள் அடங்கும். இன்றளவில், இணையத்தோடிணைந்த நிலைகள், மற்றும் வங்கி நடவடிக்கைகள் என்பன Password ஐயே எமது பாதுகாப்பின் திறவுகோலாக நம்பியிருக்கின்றன. ஆக, Password என்பது மிகவும் முக்கியமானதென்பது உண்மைதான்.
அதை எவ்வாறு பாதுகாப்பானதான உருவாக்கி ஞாபகத்தில் வைத்துக் கொள்ளலாம்?

எல்லாவற்றுக்கும் ஒரே Password ஐ பாவிக்காதீர்கள்

எல்லாச் சேவைகளுக்கும் ஒரேயொரு Password ஐ நீங்கள் பயன்படுத்துவீர்களானால், உங்கள் Passwordஐ யாரும் கண்டுபிடித்துவிட்டால் நீங்கள் பயன்படுத்தும் அனைத்துச் சேவைகள் தொடர்பிலும் உங்கள் நிலை பரிதாபத்திற்குரியதாகிவிடும். ஒரு Password ஐயே எல்லாவற்றுக்கும் பாவித்தால் அதிகளவான பிரச்சினைகளை அது உண்டு பண்ணித்தரும் என்பதை எப்போதும் மறந்துவிடாதீர்கள்.
ஆக, இதற்கு என்ன இலகுவழி? ஒவ்வொரு சேவைக்கு வெவ்வேறு Password களை உருவாக்கி ஞாபகத்தில் வைத்துக்கொள்ள இதோ ஒரு இலகு வழி.

ஒரேயொரு விதி – நினைவிலிருக்கும் 100 வேறுபட்ட Passwords

ஒரு சிறிய விதியொன்றுக்குள் நீங்கள் பாவிக்கும் Password களை உருவாக்கும் வழைமை உங்களிடமிருந்தால், 100 வகையான Password களை தனித்தனியாக ஞாபகப்படுத்திக் கொள்ளத் தேவையில்லை. ஒரு தனியான Password ஐ உருவாக்குவதற்கான வழி, முதலில் அடிப்படையான Password ஐத் தெரிவுசெய்து, அதில் நாம் Password ஐ பயன்படுத்தும் இணையச் சேவை நிறுவனத்தின் பெயரைச் சேர்த்துவிடுவதாகும்.

உதாரணமாக, நீங்கள் தெரிவுசெய்த அடிப்படை Password, KLMN என வைத்துக்கொண்டால், Yahoo இணையத்தளத்தில் Password ஐ KLMNYAHOO எனவும், Facebook  இணையத்தளத்தில் KLMNFACE எனவும் பாவிக்க முடியும்.
இதனை இன்னும் ஊகிக்கக் கடினமான Password ஆக மாற்ற, உங்கள் அடிப்படை Password ஆகிய KLMN உடன் உங்களைக் கவர்ந்த இரு இலக்கங்களை தெரிவு செய்து, அதனை மாற்றிவிடலாம்.

உதாரணத்திற்கு Gmail இணையத்தளத்தில் இந்த Password ஐ KLMN43GMAIL எனப் பாவிக்கலாம்.
இந்த ஒரு விதியைக் கொண்டு நீங்கள் நூற்றுக்கணக்கான Password களை உருவாக்கிக் கொள்ள முடியும். பொதுவாக Password எனப்படும் கடவுச்சொல் குறைந்தது 8 எழுத்துக்களைக்களைக் கொண்டிருக்க வேண்டும். அத்தோடு, இவை வெறுமனே ஆங்கில அரிச்சுவடி எழுத்துக்களை மட்டும் கொண்டிராது, இலக்கங்கள், குறியீடுகள் என்பனவற்றையும் கொண்டிருத்தல் Password இன் பலத்தை அதிகரிக்கும். ஆக, அது பற்றியும் கவனத்தில் கொள்ளுங்கள்!

அடிப்படை Password ஐ தெரிவு செய்தல்.

அடிப்படை Password ஐ தெரிவு செய்வதற்கான சில வழிமுறைகளைப் பற்றி நாம் இங்கு ஆராய்வோம்.
  • ஒரு வசனத்தின் அல்லது பாடல் வரியின் முதலெழுத்துக்கள். உதாரணமாக நீங்கள் Titanic திரைப்படத்தின் Theme Song இன் வரியான ‘Every nights in my dreams’ என்பதை பாவிக்க எண்ணினால், உங்கள் அடிப்படை Password ஆனது,  அந்தப் பாடல் வரிகளின் சொற்களின் முதலெழுத்துகளை சேர்த்தால் வரும், ENIMD என்றவாறு அமையும். Password ஐ நினைவிலிருத்த நீங்கள் பாட்டை பாடினாலே போதும்!!
  • இன்னும் அதிகமாகப் பாதுகாப்பான அடிப்படை Password ஐ தெரிவு செய்ய உதாரணமாக ஒரு சொல்லை நினைவில் நிறுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் நினைக்கும் சொல்  dog என வைத்துக் கொண்டால், keyboard இல் இந்த எழுத்துக்கள் உள்ள நிலைக்கு மேலே உள்ள எழுத்துக்களை Password ஆக மாற்ற முயலுங்கள். dog என்பதற்கு e9t என்ற சொல் கிடைக்கப் பெறும். இம்முறையால் யாருமே இலகுவில் ஊகிக்க முடியாத Password ஐ உருவாக்கிக்கொள்ள முடியும்.
Password ஐ யாரும் ஊகிக்க முடியாதளவில் வைத்துக் கொள்வதில் அதிக ஆர்வம் செலுத்துவது கட்டாயமாகும். குறைந்தது, இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவையாவது, Password ஐ மாற்றிக் கொள்ளுதல் பாதுகாப்பை இன்னும் அதிகரிக்கும்.

No comments:

Post a Comment