Wednesday, January 26, 2011

ZumoDrive: கோப்புகளை ஆன்லைனில் பதிவதற்கும், பகிர்வதற்கும்




உங்கள் கோப்புகள், புகைப்படங்கள், வீடியோக்கள்,  மற்றும் இசை ஆகியவற்றை ONLINE இல்பதிந்து பகிர்வதற்கு ZumoDrive  என்ற மென்பொருளை பயன்படுத்தலாம்.
ZumoDrive தளத்தில் தரவேற்றப்பட்ட(Upload) உங்களது கோப்புகளை, உலகின் எந்தவொரு இடத்திலிருந்தும், எந்த கருவி வாயிலாகவும், எந்த நேரத்திலும் பயன்படுத்தலாம்.
விண்டோஸ், லினக்ஸ், மேக் போன்ற இயங்குதளங்கள்(OperatingSystem) மட்டுமல்லாது நெட்புக், ஐபோன், ஸ்மார்ட்போன், அண்ட்ராய்ட் போன்ற நவீன கையடக்கக் கருவிகளுடனும் ஒத்திசைவு கொண்டது.
ZumoDrive-வை எவ்வாறு பயன்படுத்துவது?

1. ஆன்லைனில் ஏற்றப்பட வேண்டிய நமது கோப்புகளை தேர்வு செய்ய வேண்டும்.

2. ZumoDrive ல் இணையேற்ற வேண்டும்.

3. ஏற்றிய பின் எங்கிருந்து வேண்டுமானாலும் அவற்றைப் பெறலாம்.
மேலும் அடிப்படை உறுப்பினர்களுக்கு இலவசமாக 2 ஜிபி காலியிடமும் வழங்குகிறது.

மென்பொருளை தரவிறக்க இங்கே  CLICK செய்யவும்

No comments:

Post a Comment