Friday, January 21, 2011

ஆசிரியரின் திருமணத்திற்காக முழு பாடசாலைக்கும் விடுமுறையாம்!

பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரின் திருமண வைபவம் காரணமாக முழு பாடசாலையும் மூடப்பட்ட சம்பவம் ஒன்று ஹற்றன் கினிகந்தேனை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

ஹட்டன் கினிகந்தேனவிலுள்ள பாடசாலை ஒன்றுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

ஆசிரியரின் திருமணத்திற்காக முன்கூட்டியே பாடசாலை அதிபர் விடுமுறை வழங்குவது தொடர்பாக அனுமதி கோரியுள்ளதாகவும், அதனால் விடுமுறை வழங்கப்பட்டதாக அந்த பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் மூலம் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக பாடசாலை அதிபரை கேட்டபோது, வலயக் கல்வி பணிப்பாளருக்கு அறிவித்தல் விடுத்த பின்னரே நாங்கள் இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்தார்.

எனினும் இந்த விடயம் தொடர்பாக ஹற்றன் வலயக் கல்விப் பணிப்பாளர் எம். ரெங்கராஜனிடம் கேட்டபோது, இந்த விடுமுறை தொடர்பாக எவரும் தன்னுடன் கதைக்கவில்லை எனவும், இந்த விடுமுறை விடயம் தொடர்பாக விரிவான விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக அவர் கூறினார்....

No comments:

Post a Comment