Tuesday, February 22, 2011

கணிணியில் நிறுவப்பட்டுள்ள Software அழிப்பதற்கு சிறந்த மென்பொருள் MyUninstaller






விண்டோஸ் இயங்குதளத்தில் நமக்கு வேண்டிய மென்பொருள்கள், விளையாட்டுகள், புரோகிராம்கள் போன்றவற்றை கணிணியில் நிறுவிப் பயன்படுத்துகிறோம். இவை வன்தட்டில் பெரும்பாலும் Program files பகுதியில் தான் நிறுவப்படும். நாம் என்னென்ன மென்பொருள்களை நிறுவியுள்ளோம் என்பதை அறிய Control panel சென்று Add/Remove programs பகுதியில் பார்க்கலாம். மேலும் இங்கிருந்தே ஒரு மென்பொருளை நிறுவலாம் அல்லது வேண்டாம் என்றால் கணிணியிலிருந்து நீக்கலாம்.

இந்த மாதிரி செய்வது சிறந்த முறை எனினும் மேலும் சில வசதிகள் இருந்தால் நலமாக இருக்கும். இயல்பாக விண்டோசில் உள்ள இந்த Uninstaller க்கு மாற்றாக கிடைக்கும் ஒரு மென்பொருள் தான் MyUninstaller. இதில் கணிணியில் நிறுவப்பட்டுள்ள அனைத்து மென்பொருள்களையும் பட்டியலிடுகிறது. இங்கிருந்தே எந்த மென்பொருளை வேண்டுமானாலும் நீக்கலாம்.

இதன் சிறப்பம்சம் என்னவென்றால் நிறுவப்பட்டுள்ள மென்பொருள்களைப் பற்றிய கூடுதல் விவரங்களைத் தெரிவிக்கிறது. குறிப்பிட்ட மென்பொருளின் பெயர், பதிப்பு, நிறுவனம், நிறுவப்பட்டுள்ள இடம் அல்லது போல்டர், இதனை நீக்கத்தேவையான கட்டளை ( Product name, version, company, Uninstall string ) போன்றவற்றை எளிதாக பட்டியலிடுகிறது.

Uninstall programs with MyUninstaller
மேலும் இந்த மென்பொருளின் மூலம் கணிணியில் நிறுவப்பட்டுள்ள புரோகிராம்களின் பட்டியலை ஒரு உரைக்கோப்பாக (Text file) அல்லது HTML கோப்பாகவும் சேமித்து வைத்துக்கொள்ள முடியும்.

Nirsoft நிறுவனத்தின் தயாரிப்பான இந்த இலவச மென்பொருள் விண்டோஸ் இயங்குதளத்தின் அனைத்து பதிப்புகளிலும் செயல்படக்கூடியது.

தரவிறக்கச்சுட்டி: Download MyUninstaller

No comments:

Post a Comment