Monday, February 28, 2011

ஒரு Monitor இல் நான்கு கணினிகளை இணைப்பது எப்படி????





உங்களிடம் ஒன்றுக்கு மேற்பட்ட கணினிகள் இருந்தால் அவற்றை ஒரு மொனிட்டரில் இணைத்து ஒரே கீபோட் மற்றும் மவுஸ் கொண்டு இயக்கலாம் இதற்கென தனியாக மென்பொருள்களை நிறுவ வேண்டிய அவசியமில்லை. ரூட்டர் (Router) சாதனம் போன்ற அமைப்பிலான KVM switch எனும் ஒரு சிறிய வன்பொருள் சாதனம் மட்டுமே இதற்கு அவசியம். இங்கு KVM என்பது Keyboard, Video (monitor), Mouse என்பதனைக் குறிக்கிறது. அதாவது கேவியெம் சுவிச் மூலம் ஒன்றுக்கு மேற்பட்ட கணினிகளை ஒரே கீபோட், மொனிட்டர் மற்றும் மவுஸ் கொண்டு இயக்க முடிகிறது. ரூட்டரில் காணப்படும் நெட்வர்க் போட்டுக்குப் பதிலாக இந்த கேவியெம் சுவிச்சில் VGA (Port) போர்டுடன் PS2 அல்லது USB போர்ட் மட்டுமே காணப்படும். அத்தோடு அதை இயக்குவதற்கான மின் சக்தியை தனியாக வழங்க வேண்டிய அவசியமுமில்லை. அதனுடன் இணைக்கப்படும் கேபல்கள் மூலம் கணியிலிருந்தே மின்சக்தியைப் பெற்றுக் கொள்ளும்.

ஒரே மொனிடரில் ஒன்றுக்கு மேற்பட கணினிகளை இணைத்துப் பணியாற்றும் அமைப்பு அனேகமாக அதிக எண்ணிக்கையிலான சேர்வர் கணினிகள் பயன்படுத்தப்படும் கணினி வலையமைப்புகளில் காணலாம். கணினி வலையமைப்புகளிலுள்ள நெட்வர்க சேர்வர்களை (Network Server) நிர்வகிப்பதற்கே இந்த கேவியெம் சுவிச் பயன் படுத்தப்படுகிறது. ஒவ்வொரு சேர்வருக்கும் தனியாக மொனிட்டர் கீபோர்ட் மற்றும் மவுஸ்களைப் பொருத்துவது அவசியமில்லாத ஒரு விடயம். ஏனெனில் சேர்வர் கணினியுடன் நேரடியான பயனர் தொடர்பு அரிதாகவே நடைபெறும். ஒரு சேர்வரை அணுக அந்த சேர்வர் கணினியிலுள்ள கீபோர்ட் மவுஸைப் பயன் படுத்த வேண்டிய தேவையிராது. கேவியெம் சுவிச்சுகளைப் பயன் படுத்துவதன் மூலம் சேர்வர் கணினிகளை இல்குவாக ஒரே இடத்திலிருந்து நிர்வகிக்க முடிவதோடு செலவினங்ளைகயும் குறைக்க முடிகிறது.
பொதுவான பாவனைக்கென வரும் கேவியெம் சுவிச் இரண்டு முதல் நான்கு கணினிகளை இணைக்கக் கூடியவாறு த்யாரிக்கப்படுகின்றன. மாறாக பெரிய கணினி வலையமைப்புக்களில் பயன் படுத்துவதற்கென 2 முதல் 64 கணினிகள் பொருத்தக் கூடிவாறான `கேவியெம் சுவிச்சுகள் பாவனையிலுள்ளன.
நான்கு கணினிகளை இணைக்கக் கூடிய கேவியெம் சுவிச்சில் நான்கு VGA போர்டுகளும் எட்டு PS2 அல்லது USB போர்டுகளும் காணப்படும். இந்த நான்கு VGA போர்டிலும் நான்கு கணினிகளிலிருந்து வெளியேறும் வீடியோ கேபல்கள் பொருத்தப்படும். அதே போன்று நான்கு கணினிகளிலிருந்து வெளியேறும் கீபோர்ட் மற்றும் மவுஸ் கேபல்கள் எட்டு PS2 அல்லது USB போர்டுகளில் இணைக்கப்படும். அதற்கென விசேட கேபல்கள் தனியாக வாங்க வேண்டிய அவசியமில்லை. . கேவியெம் சுவிச்சுடனேயே அவை தரப்படும்.
எனினும் நான்கு கணினிகளிலிருந்து வரும் வீடியோ காட்சிகளும் மொனிட்டரில் ஒரே நேரத்தில் தோன்றாது. நீங்கள் விரும்பும் கணினியிலிருந்து வரும் வீடியோ வெளியீட்டை கேவியெம் ஸ்விச்சின் மேற்பகுதியில் உள்ள சிறிய பட்டனை மீண்டும் மீண்டும் அழுத்துவதன் மூலம் பெறலாம். புதிதாக வரும் கேவியெம் சுவிச்சுகளில் கணினிக்கு கணினி மாறுவதற்கு கீபோர்டையும் பயன் படுத்த முடிகிறது. .
இரண்டு கணினிகளை ஒரே நேரத்தில் பயன் படுத்த் வேண்டிய சூழ் நிலைகளிலும் புதிதாக மொனிட்டர் வாங்குவதற்கு அதிகம் செலவாகும் எனும் நிலையிலும் இந்த கேவியெம் ஸ்விச்சை வாங்கிப் பொருத்தலாம்

Autorun.inf - வைரஸை நீக்கும் உபயோகமான Software


Autorun.inf என்பது CD / DVD மற்றும் USB drive கள் கணினியில் உள்ளே நுழைத்தவுடன் தானாகவே இயங்குமாறு செய்ய எழுதப்படும் கோப்புகளாகும். இவை தானாகவே அந்த கோப்பில் எழுதப்பட்டுள்ள முக்கிய பயன்பாட்டுக்கோப்பை (Application or Exe ) இயக்கிவிடும். ஒரு எளிய autorun.inf கோப்பானது இப்படி இருக்கும்.

[autorun]
open=autorun.exe
icon=autorun.ico

இது நிச்சயமாக வைரஸ் இல்லை. ஆனால் வைரஸ்கள் உங்களின் ஒவ்வொரு டிரைவிலும் இக்கோப்புகள் வழியே பரவுகின்றன. பிறகு வைரஸ்கள் நொடியில் பல்கிப்பெருகும். இதனால் உங்கள் கணிபொறியின் வேகம் வெகுவாய் குறைகிறது. இக்கோப்புகளை சில ஆண்டி- வைரஸ் தொகுப்புகளால் கண்டறிய முடிவதில்லை.






இச்சிக்கலை எளிதாக போக்க ஒரு மென்பொருள் உள்ளது. இதன் பெயர் Smart Virus remover இதன் சிறப்புகள்,

1. Autorun.inf கோப்புகளை எளிதாக நீக்குகிறது.
2. இழந்த விண்டோஸ் பண்புகளை ( Attributes ) மீட்கிறது.
Registry Disabled,
Task manager Disabled,
Enable Folders options
Enable run
Enable command prompt


மேலும் அனைத்து Drive களிலும் தானாக இயங்குவதை (Autoplay)
தடுக்கிறது.

3. USB டிரைவ் இல் உள்ள வைரஸ்களை நீக்குகிறது.
4. பென் டிரைவ் இல் எழுதாமல் தடுக்கவும் உதவுகிறது
( Write -protect)




Download now clicked செய்து தரவிறக்கவும்
இதன் தரவுச் சுட்டி http://www.fiberdownload.com/Download/20831/Smart-Virus-Remover

Sunday, February 27, 2011

வைரஸ் தாக்கிய பைலை மீளப்பெறுவது எப்படி?

நீங்கள் pen Drive உபயோகிப்பவராக இருந்தால் நிச்சயம் இந்த பிரச்சினைக்கு முகம் கொடுத்து இருப்பீர்கள்.சரி வைரஸ் தாக்கிய பைலை எப்படி மீளப்பெறுவது என்று பார்ப்போம். 

இதற்கு கீழ்வரும் விசயங்களை கவணிக்கவும்

01.pen Drive இல் இருந்த பைல் ஐ Antivirus  அழித்த பிறகு காணவில்லை

02.pen Drive இன் used space கூடதலாக காட்டுகிறது ஆனால் அதற்குறிய பைல் pen drive இல் இல்லை

03.நீங்கள் மீளப்பெற நினைக்கும் பைல் இப்படியாக இருக்க வேண்டும்.(.DAT,.FLV,.MP4,.VOB,.MP3,.ZIP,.RAR,.PDF,.HTML,.RTF,.DOC,.JPG,.PNG,.TXT.....)

04.நீங்கள் மீளப்பெற நினைக்கும் பைல் .exe இல் இருந்தால் மீளப்பெற முடியாது.

இவ்வளவு விசயங்களும் உங்களுக்கு பொருந்தும் எனின் நிச்சயமாக மீளப்பெற முடியும்.


இதை நிச்சயமாக மீளப்பெற முடியும் என்பதற்குரிய காரணம் என்ன வென்றால் உங்களுடைய pen drive இல் ஒரு போல்டருக்குல் வைரஸ் இருந்தால் Antivirus software அந்த Virus ஐ அழித்து விட்டு அந்த Folder ஐ system Hidden செய்து விடும்.ஆனால் அந்த போல்டர் உங்களுடைய pen drive இல் தான் இருக்கிறது.system Hidden Folder ஐ எப்படி தெரிய வைப்பது என்று பார்ப்போம்.

start > control panel > folder Options > view


Show hidden files and folder என்பதை தெரிவு செய்து கொண்டு Hide protected operating system files [Recommended] என்பதை கிளிக் செய்யுங்கள்.ஒரு செய்தி வரும் அதற்கு yes என்பதை கொடுத்து விட்டு OK செய்து கொள்ளுங்கள்.


இப்போது உங்களுடைய pen Drive இற்குல் செல்லுங்கள் அந்த பைல் இருப்பதை காணலாம் ( சில நேரம் வைரஸ் எச்சரிக்கையும் வரும்

Cricinfo International Scores

Cricinfo International Scores: "Get the latest scores of all the international cricket matches from Cricinfo. Add the Cricinfo International Scores widget now!"

Saturday, February 26, 2011

நாம் கணினியில் பயன்படுத்தும் Hard DIsk , RAM – Random Access Memory என்பதின் பயன் என்ன??








கணினியின் முக்கிய பயன்பாடுகளில் ஒன்று பெருமளவிலான தகவல்களை சேமித்து வைத்துக்கொள்ளும் வசதி. இவ்வாறாக சேமிக்கப்படும் தகவல் கிடங்கில் இருந்து எந்த ஒரு குறிப்பிட்ட தகவலையும் நொடிப்பொழுதில் எடுத்துவிட கணினி உதவுகிறது. இவ்வாறாக தகவலை சேமித்துவைப்பதற்காக, கணினிகளில் இரண்டுவகையான  நினைவகங்கள் உள்ளன. அவை

1. தற்காலிக நினைவகம் – Temporary Memory area
2. நிலையான நினைவகம் – Permanent Memory area 
என்று அழைக்கப்படுகின்றன

நிலையான நினைவகம் – Permanent Memory area



நிலையான சேமிப்பு கருவிகளாக நாம் Hard Disk, floppy disk,
CDROM போன்றவற்றைப் பயன்படுத்துகிறோம். இவற்றில் சேமிக்கப்படும் தகவல்களை எப்பொழுதுவேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளும் அளவிற்கு நிலையானவை.
கணினியில் நாம் எந்த ஒரு வேலையைச் செய்யவேண்டுமென்றாலும் அவ்வேலையைச் செய்வதற்கு என ஒரு மென்பொருளைப் பயன்படுத்தவேண்டுமென்பது (அல்லது செயலியை) உங்களுக்குத்தெரியும். எடுத்துக்காட்டாக நான் ஒரு கடிதம் தயார் செய்ய வேண்டும் என்றால், என்னிடம் Ms-Word போன்ற மென்பொருளும், படம் வரைய CorelDraw போன்ற மென்பொருள் என ஒவ்வொரு வேலைக்கும் ஒரு மென்பொருள் அவசியமாகிறது. இத்தகைய மென்பொருள்களும் நமது கணினியில் நிலையாக Hard Disk என்னும் சேமிப்புக்கருவியில் சேமித்து வைக்கப்படவேண்டும் அப்பொழுதுதான் நாம் வேண்டிய நேரத்திற்கு அவற்றை உபயோகிக்க முடியும்.

இத்தகைய மென்பொருள்கள் நாம் ஒரு கட்டளையை கணினிக்கு இட்டால் அது அவ்வேலையை எப்படிச்செய்யவேண்டும் என்ற தகவல்களைத்தந்து உதவுகிறது. எடுத்துக்காட்டாக ஒரு கோப்பை நான் அழிக்க வேண்டும் என்றால் அதற்கான கட்டளையைக் கொடுத்தவுடன் கணினி அந்த கட்டளைக்கான தகவல்கள் எங்கிருக்கின்றன எனத்தேடிக் கண்டுபிடித்து அவற்றில் என்ன எழுதப்பட்டிருக்கிறது.

என்பதைப்படித்து அதன்பின் அதில் கூறப்பட்டுள்ளவாறு நடந்து அந்த கோப்பினை அழிக்கிறது. அதுபோல நான் எழுதியுள்ள ஒரு வரியை சிகப்பு நிறத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும் என்றாலும் நான் எந்த மென்பொருளை அப்பொழுது பயன்படுத்திக் கொண்டிருக்கிறேனோ அந்த மென்பொருளில் இருந்து சிகப்பு நிறத்திற்கு ஒரு வரியை மாற்ற என்ன செய்யவேண்டும் என்பதைப்படித்து அவ்வாறு செய்து அதன் நிறத்தை மாற்றுகிறது ஆக எந்த ஒரு கட்டளையானாலும் அந்த கட்டளைக்கான, அதை நிறைவேற்றுவதற்கான தகவல்கள் நமது கணினியில் மென்பொருளாக ஏற்றப்பட்டிருக்கவேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் தாங்கள் கொடுக்கும் கட்டளைக்காண தகவலைத்தேடிவிட்டு இது செல்லத்தக்க கட்டளை இல்லை என்று கூறிவிடும்.
பொதுவாக இத்தகைய மென்பொருள்களைக் Hard Disk என்னும் சேமிப்பு கருவியில் தான் சேமித்துவைக்கிறோம். நாம் தரும் ஒவ்வொரு கட்டளைக்கும் கணினி தேவையான தகவல்களை hard diskல் இருந்து எடுத்துக்கொண்டிருக்க முடியாது அவ்வாறாக அது ஒவ்வொரு கட்டளைக்கும் hard diskஐப் பயன்யடுத்தி அதனுள் இருந்து அந்த கட்டளைக்கு என்ன செய்யவேண்டும் என்ற தகவலை எடுத்து அதன்படி நடக்க வேண்டும் என்றால் இது மிக அதிக நேரம் எடுத்துகொளளக் கூடியது ஏனெனில் hard disk ல் தட்டுகளில் தகவல்கள் சேமிக்கப்படுகின்றன அவற்றை எடுப்பதற்கு அந்த தட்டுகள் சுற்றப்பட்டு அதில்
சரியான தகவல் சேமிக்கப்பட்டுளள பகுதியில் சென்று தகவலை எடுத்துத்தர கூடுதல் நேரம் எடுத்துக்கொள்ளும் கணினியும் மிகமெதுவாகவே செயல்படும்.

தற்காலிக நினைவகம் – Temporary Memory area






இத்தகைய சிரமங்களைத் தவிர்த்தல் பொருட்டு நாம் எந்ததெந்த மென்பொருள்களைப் பயன்படுத்திக்கொண்டிருகிறோமோ அந்த மென்பொருள் மொத்தத்தையும் வேறு ஒரு மின்னனு பதிவுக்கருவிக்கு தற்காலிகமாக சேமித்து வைத்துக்கொண்டு எப்பொழுதெல்லாம் தகவல் தேவைப்படுகிறதோ அப்பொழுதெல்லாம் கணினி அந்த மின்னனுக்கருவியிலிருந்து எடுத்துப் பயன்படுத்திக்கொள்ள வழிசெய்யப்பட்டுள்ளது. அத்தகைய மின்னனுக்கருவி நமது
கணினியின் Microprocessor களின் வேகத்துக்கு ஈடுகொடுத்து தன்னுள் சேமிக்கப்பட்டுள்ள தகவல்களைத் தரவல்லவை. இக்கருவியே (இராம்) RAM என்று அழைக்கப்படுவதாகும்.

இந்த வகைச் சேமிப்பு கருவிகள் மின்சார இணைப்பு இருக்கும் வரைக்கும் இயங்கும், மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டால் அதில் சேமிக்கப்பட்டுள்ள தகவல்கள் அழிந்துபோய்விடும் அதனால் தான் இதனை தற்காலிக சேமிப்பு பகுதி என்று கூறுகிறோம்.

பொதுவாகவே எந்த ஒரு மென்பொருளையும் நீங்கள் இயக்கினால் சில மணித்துளிகள் கழித்தே அவை இயங்க ஆரம்பிக்கும் அக்கால இடைவெளியில் கணனியில் நாம் இயக்கும் மென்பொருளின் அனைத்து வேண்டிய தகவல்களும் (இராம்)RAM என்னும் இடத்திற்கு எடுத்துச்செல்லப்படுகினறன. அதன்பிறகு எந்த ஒரு கட்டளையை நீங்கள் இட்டாலும் அது உடனே அதனை நிறைவேற்றுவதைப் பார்க்கமுடியும். (நீங்கள் Ms-word, excel போன்ற மென்பொருளை இயக்கிப்பாருங்கள்).

அடுத்து அந்த மென்பொருளை விட்டு வெளியேரும் பொழுது அந்த மென்பொருள் சம்பந்தப் பட்ட அனைத்து தகவல்களும் RAM நினைவில் இருந்து அகற்றப்பட்டு வேறு ஏதாவது செயலிக்குள் நுழைதால் அவை உடனே அதில் ஏற்றப்படும்.

இத்தகைய RAM நினைவகத்தின் கொள்ளளவு Byte என்னும் அளவீட்டால் குறிக்கப்படுகிறது  ஒரு Byte இடத்தில் ஒரு எழுத்தை நாம் சேமிக்க முடியும்.

1024 Byte கள் சேர்ந்து அது – 1 kilo byte (KB)
1024 KB கள் சேர்ந்து அது – 1 Mega byte (MB) என்றும் அழைக்கப்படுகின்றன.
1024 MB கள் சேர்ந்து 1GB ஆகும்.


பிற்குறிப்பு: தற்போதைய கணினிகளில் நவீனமாக DDR Ram பயன்படுத்தப்படுகின்றன.




இணையத்தில் அனைத்து வகை வீடியோக்களை வேகமாக தரவிறக்க



நாம் இணையத்தில் பல எண்ணற்ற வீடியோக்களை காண்கிறோம். நமக்கு பிடித்த பாடல்கள், படங்கள், நகைச்சுவை மற்றும் தொழில்நுட்பம் இப்படி ஏராளமான வீடியோக்களை நாம் இனையத்தில் பார்த்து ரசிக்கிறோம். இந்த வீடியோக்களை பார்க்கவே இணையத்தில் பல தளங்கள் இருந்தாலும் Youtube, Daily motion, Meta cafe போன்ற தளங்கள் பிரபலமானவை. 
ஒருசில வீடியோக்களை நாம் பார்க்கும் போது நாம் அதை நம் கணினியில் சேமித்து கொள்ளலாம் என்று தோன்றும். ஆனால் இந்த தளங்களில் நாம் வீடியோவை பார்க்க மட்டுமே முடியும் தரவிறக்க முடியாது. இதை போக்கவே ஒரு சூப்பர் மென்பொருள் உள்ளது.


பயன்கள்:   
  •  உபயோகிப்பதற்கு மிகவும் சுலபமானது. 
  • இது முழுக்க முழுக்க இலவச மென்பொருள்.
  • நமக்கு தேவையான வீடியோவின் url கொடுத்து START பட்டனை அழுத்தினால் போதும் அந்த வீடியோ நம் கணினியில் சேமிக்க பட்டு விடும்.
  • வீடியோ டவுன்லோட் திறன் மிகவும் வேகமாக உள்ளது.
  • வீடியோவை தரவிறக்கும் போதே நமக்கு தேவையான பார்மட்டில் மாற்றும் வசதி(AVI,MP4,WMV)
  • வீடியோவில் உள்ள பாடலை மட்டும் தனியே பிரித்தெடுக்கும் வசதி.
  • இப்படி ஏராளமான வசதிகளை பெற்று உள்ள இந்த மென்பொருளின் அளவு 7.19 MB மட்டும் தான்.
பயன் படுத்தும் முறை:
  • இந்த மென்பொருளை தரவிறக்கியவுடன் உங்களுக்கு வரும் EXE பைலை இரண்டு முறை க்ளிக் செய்து உங்கள் கணினியில் நிறுவி கொள்ளுங்கள்.
  • இப்பொழுது டெஸ்க்டாப்பில் உள்ள சார்ட்கட் பைலை ஓபன் செய்து கொள்ளுங்கள் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
  • இங்கு நீங்கள் தரவிறக்க வேண்டிய வீடியோவின் URL காப்பி செய்து அங்கு கொடுக்க பட்டிருக்கும் URL என்ற இடத்தில் பேஸ்ட் செய்யவும்.
  • அடுத்த கட்டத்தில் SAVE TO என்ற இடத்தில் உங்கள் வீடியோ சேமிக்க வேண்டிய இடத்தை தேர்வு செய்யவும்.
  • அடுத்து OUTPUT என்ற இடத்தில் நீங்கள் இந்த வீடியோவின் வகையை(FORMAT) தேர்வு செய்து கொள்ளவும். மாற்றவேண்டாம் என்றால் WITH OUT CONVERSION என்பதை தேர்வு செய்து கொள்ளவும்..


அவ்வளவு தான் இந்த முறையை பயன்படுத்தி இணையத்தில் உள்ள வீடியோக்களை எளிதாக தரவிறக்கி கொண்டு நினைத்த நேரத்தில் பார்த்து ரசித்து கொள்ளலாம். 

Friday, February 25, 2011

புதிதாக பரவி வரும் facebook வைரஸ்





இவர்கள் சிம்ஸ்(sims) என்ற ஆன்லைன் கேம்களை விளையாடி வந்தவர்கள்

கீழ் வரும் லிங்க்குகள் உங்கள் நண்பர்களின் புகைப்படங்களில் tag செய்யபட்டோ ஸ்டேடஸ் இல் பதியப்பட்டோ இருக்கலாம் அதனால் கீழ் வரும் லிங்க்குகளை கிளிக் செய்ய  வேண்டாம்   



http://apps.facebook.com/cr_abmhuclwdxge/

http://apps.facebook.com/jjzkrxjauwdqbxn/



அது பின்வருமாறு தோன்றலாம்

 





ஹார்ட்டிஸ்க் எவ்வளவு இடம் மீதம் உள்ளது உடனே அறிந்துகொள்ள

ஹார்ட்டிஸ்கில் எவ்வளவு இடம் மீதம் உள்ளது என்று நாம் ஒவ்வொரு டிரைவாக சென்று சோதிக்க வேண்டும். ஆனால் இந்த சாப்ட்வேரை நீங்கள் பதித்துவிட்டால் போதும். நமக்கு நமது ஹார்ட்டிஸ்க்கில் உள்ள டிரைவின் இருப்பை உடனே காண்பித்துவிடும்.5 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.



இதில ஏதாவது ஒரு டிரைவில் வைத்து கிளிக்செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.



இதில் உள்ள Help கிளிக் செய்தால் ஒவ்வோரு கட்டமாக உதவினை எளிதாக  விளக்கி உள்ளார்கள். பைல் டுப்ளிகேட் கண்டுபிடிப்பது -டெம்பரவரி பைல்களை நீக்குவது என பல வசதிகள் இதில கொடுக்கப்பட்டுள்ளது. கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.

சின்ன சொப்ட்வேர் என்பதால் ஹார்ட்டிஸ்கில் இடம் பிடிக்காது..பயன்படுத்திப்பாருங்கள் 

இணையத்தொடர்பின் போது F1 Key அழுத்தாதீர்கள்! ஆபத்து!







மைக்ரோசாப்ட் நிறுவனம் அண்மையில் ஓர் எச்சரிக்கையை விடுத்துள்ளது. மைக்ரோசாப்ட் விண்டோஸ் 2000, எக்ஸ்பி சிஸ்டங்களில் ஒன்றை இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 7 அல்லது 8 சேர்த்துப்பயன்படுத்துபவர்கள் எப்1 கீ எனப்படும் ஹெல்ப் கீயை அழுத்தினால், ஹேக்கர்கள் எளிதாக கம்ப்யூட்டர்களில் புகும் வாய்ப்பு உண்டு என்று அறிவித்துள்ளது.

இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் உள்ள, விசுவல் பேசிக் கோடில் அமைந்த வரிகளில் உள்ள சிறு பிழையை ஹேக்கர்கள் பயன்படுத்த முடியும். ஏதேனும் ஒரு பாப் அப் விண்டோவினைத் திறந்து, உதவிக்கு F1 கீயினை அழுத்துமாறு ஹேக்கர்கள் வடிவமைத்திருப்பார்கள். அவ்வாறு அழுத்துகையில், அவர்கள் வேறு ஒரு இணையப் பக்கத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து மோசமான புரோகிராம் வரிகள் வழியாக, கம்ப்யூட்டரின் கட்டுப்பாடு ஹேக்கர்களின் கைகளுக்குச் சென்றுவிடும். இவ்வளவும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்புகளில் உள்ள பிழைஉள்ள தொகுப்பு வரிகளே காரணமாகும். இது குறித்த எச்சரிக்கையை மைக்ரோசாப்ட் வழங்கியுள்ளது. யாரும் இது போல பாப் அப் விண்டோ எச்சரிக்கையைத் தொடர்ந்து F1 கீயை அழுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளது.

கணனியை ON செய்ததும் பீப் என்று தொடர்ந்து ஒலி கேட்டால்?





கணினி ஆன் செய்தவுடன் bios ஆனது booting ஆகும் நேரத்தில் ஹார்டுவேர் பாகங்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா என சோதிக்கும். அப்படி ஏதாவது ஒரு சில பாகங்கள் சரியில்லை என்றால் உடனே கணினியில் இருந்து பீப் ஒலி ஒலிக்க தொடங்கும்.

அப்படி ஒலிக்கும் ஒலியின் எண்ணிக்கையை வைத்தே நாம் எதில் சிக்கல் இருக்கிறது என கண்டுபிடிக்கலாம்.......

*1 , 2 , 3 , முறை- ram அல்லது motherboard

*4 , முறை - டைமர் (motherboard ) இனை சரி செய்யவும்

*5 , முறை - ப்ராசசரில் சிக்கல்

*6 , முறை - key board , key போர்டு கண்ட்ரோல் , key போர்டு கண்ட்ரோல் ஷிப்

*7 , முறை - motherboard இல் உள்ள ஜம்பர்கள் சரியாக உள்ளாதா என பார்க்கவும். 


Thursday, February 24, 2011

Printer இனை பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டிய சில...






*Printer இல் அதிக தாள்களை அடுக்கி வைக்க கூடாது.


*Laster Printer இல் ஒரு தடவை எடுத்த பின் தாளை மீண்டும் Printer  எடுப்பது   நல்லதல்ல. ஏனெனில் இல் இருந்து வெளிவரும் வெப்பம் ஏற்கனவே அச்சான மையை உருக்கி உள்ளே கறையாக படியும் 


*Printer இல் பேப்பர்கள் அடிக்கடி சிக்கினால் பேப்பரை மாற்றுங்கள் அவ்வாறே சுருக்கு கோடு வந்தால் தடிப்பான பேப்பரை போடவும் 


*Printer இல் பயன்படுத்தப்படும் காட்ரோனார்களை அதன் பாவனை முடிவு திகதி க்கு முன் பயன்படுத்த வேண்டும் 


*ரோனர்களை நிலைக்குத்தாக வைக்காது கிடையாக வைப்பதே நல்லதாகும்


*ரோனர் காட்ரேச்சுக்களை வெப்பம்படும் பகுதிகளில் வைக்க கூடாது


*சுத்தம் செய்யும் போது Printer Manual  ஐ பின்பற்ற வேண்டும் 


*உள்ளே தூசுதுணிக்கை செல்லாதவாறு பராமரிக்க வேண்டும்

கூகுள் குரோம் உபயோகிப்பவர்களுகு்கு Gmail இல் பயனுள்ள புதிய வசதி (INCOMING MAIL AND CHAT ALERT)





நாம் எந்த நேரமும் ஆன்லைனிலேயே இருக்க முடியாது. அந்த நேரத்தில் நமது ஜிமெயில் முகவரிக்கு வரும்  ஏதேனும் முக்கியமான மெயில் அல்லது முக்கிய நபரிடம் இருந்து Chat வந்தாலோ அவை நாம் மறுபடியும் எப்பொழுது ஜிமெயிலை திறக்கும் போது தான் தெரிய வரும். இதன் மூலம் சில முக்கியமான சாட்டிங் நாம் தவற விட்டு விடுவோம். அல்லது நமக்கு வந்துள்ள முக்கிய மெயிலை காலம் தாழ்ந்தே படிக்க கூடிய பிரச்சினை இருந்தது. இனி அந்த பிரச்சினை நமக்கு இருக்காது.  ஜிமெயிலில் ஒரு புதிய வசதியை அறிமுக படுத்தி உள்ளனர் அதாவது DESKTOP NOTIFICATIONS EMAIL AND CHAT என்பதாகும். 
இனி நாம் ஆப்லைனில் இருந்தாலும் நமக்கு ஏதேனும் முக்கிய மெயில் வந்தாலோ அல்லது நமக்கு ஏதேனும் சாட் வந்தாலோ இனி நமக்கு ஒரு அறிவிப்பு செய்தி வரும். அதை பார்த்து முக்கிய நபரிடம் இருந்து வந்தால் நாம் அதை தவறவிடாமல் உடனே அதற்க்கு பதில் அளிக்கலாம்.

  • இந்த வசதியை பெற 
  • உங்கள் ஜிமெயில்  கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள்.
  • பின்பு ஜிமெயிலில் Settings க்ளிக் செய்யுங்கள்.
  • பிறகு அங்கு உள்ள Destop Notification வசதிக்கு சென்று கீழே படத்தில் உள்ள மாதிரி தேர்வு செய்யவும்

  • .


  • படத்தில் உள்ளதை போல தேர்வு செய்ததும் கீழே கடைசியில் உள்ள SAVE CHANGES என்ற பட்டனை க்ளிக் செய்து உங்கள் மாற்றத்தை சேமித்து கொள்ளுங்கள்.
  • அவ்வளவு தான் இனி எப்பொழுதும் ஆன்லைனில் இருந்து கொண்டு மெயில் வருமா,வருமா என பார்த்து கொண்டு இருக்க தேவையில்லை 

  • புதிய மெயில் வந்தால் நாம் ஆப்லைனில் இருந்தாலும் நமக்கு அறிவிப்பு செய்தி வரும்.
Chat  வந்தாலும்  நமக்கு செய்தி வரும்
  • .


Hard disk எப்படி இயங்குகிறது தெரியுமா?(Videoஇணைப்பு)



கணனி வேலை செய்யும் போதும் Hard disk எவ்வாறு வேலை செய்கிறது என்று கொடுக்கப்படுள்ளது.


 


இங்குள்ள Video அனைத்திலும் Hard Disk வெவ்வேறு விதத்தில் வேலை செய்யும் பொழுது என்ன நடக்குது என்று உள்ளது. 


1.Inside of Hard Drive



2.Inside of Laptop_Notebook Hard Drive



Wednesday, February 23, 2011

Gmail ஐ உங்கள் விருப்பம் போல் அழகாக மாற்ற





ஜிமெயிலில் உள்ள வசதிகளை பற்றி சொல்ல வேண்டுமானால் ஒரு மாதம் முழுவதும் பதிவு போட்டாலும் முடியாது அந்த அளவிற்கு வசதிகளை கொண்ட ஒரே மெயில் நிறுவனம் தான் இந்த ஜிமெயில். இதில் இருக்கும் இன்னொரு அழகான வசதி நம்முடைய ஜிமெயிலின் பக்கத்தை நாம் நம் விருப்பம் போல் அழகு படுத்தி கொள்ளலாம்.


 




அழகாக உள்ளதல்லவா இது போன்று உங்கள் பக்கத்தையும் மாற்றி கொள்ள கீழே உள்ள வழிமுறைகளை தொடருங்கள். 


  • இதற்கு முதலில் உங்கள் ஜிமெயில் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள். 

  • பின்பு ஜிமெயிலின் Settings மெனுவிற்கு செல்லுங்கள். 

  • Settings க்ளிக் செய்ததும் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.





  • இதில் உங்களுக்கு பிடித்தமானதை க்ளிக் செய்தவுடன் அடுத்த வினாடியே உங்கள் விண்டோ மாறிவிடும். இப்படி உங்களுக்கு தேவையானதை தேர்வு செய்து கொள்ளுங்கள்.



  • ஒரு சில தீம்ஸ் தேர்வு செய்யும் போது உங்கள் location கேட்கும். அதை கொடுத்து விடவும். ஏனென்றால் அந்த இடத்தின் கால நிலைக்கு ஏற்ப அந்த தீம்ஸ் தானாகவே மாறி கொள்ளும்.



  • இதில் random என்பதை தேர்வு செய்தால் அனைத்து தீம்ஸும் உங்களுக்கு மாறி மாறி வரும்.



  • ஒருவேளை இதில் உள்ள எந்த தீம்ஸும் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் கீழே உள்ள Choose your own colors என்ற கட்டத்தில் க்ளிக் செய்யவும்.



  • இதில் உங்களுக்கு தேவையான நிறங்களை தேர்வு  செய்து கொள்ளலாம்.