ஜிமெயிலில் உள்ள வசதிகளை பற்றி சொல்ல வேண்டுமானால் ஒரு மாதம் முழுவதும் பதிவு போட்டாலும் முடியாது அந்த அளவிற்கு வசதிகளை கொண்ட ஒரே மெயில் நிறுவனம் தான் இந்த ஜிமெயில். இதில் இருக்கும் இன்னொரு அழகான வசதி நம்முடைய ஜிமெயிலின் பக்கத்தை நாம் நம் விருப்பம் போல் அழகு படுத்தி கொள்ளலாம்.
அழகாக உள்ளதல்லவா இது போன்று உங்கள் பக்கத்தையும் மாற்றி கொள்ள கீழே உள்ள வழிமுறைகளை தொடருங்கள்.
இதற்கு முதலில் உங்கள் ஜிமெயில் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள்.
பின்பு ஜிமெயிலின் Settings மெனுவிற்கு செல்லுங்கள்.
Settings க்ளிக் செய்ததும் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
இதில் உங்களுக்கு பிடித்தமானதை க்ளிக் செய்தவுடன் அடுத்த வினாடியே உங்கள் விண்டோ மாறிவிடும். இப்படி உங்களுக்கு தேவையானதை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
ஒரு சில தீம்ஸ் தேர்வு செய்யும் போது உங்கள் location கேட்கும். அதை கொடுத்து விடவும். ஏனென்றால் அந்த இடத்தின் கால நிலைக்கு ஏற்ப அந்த தீம்ஸ் தானாகவே மாறி கொள்ளும்.
இதில் random என்பதை தேர்வு செய்தால் அனைத்து தீம்ஸும் உங்களுக்கு மாறி மாறி வரும்.
ஒருவேளை இதில் உள்ள எந்த தீம்ஸும் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் கீழே உள்ள Choose your own colors என்ற கட்டத்தில் க்ளிக் செய்யவும்.
இதில் உங்களுக்கு தேவையான நிறங்களை தேர்வு செய்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment