கணினியின் முக்கிய பயன்பாடுகளில் ஒன்று பெருமளவிலான தகவல்களை சேமித்து வைத்துக்கொள்ளும் வசதி. இவ்வாறாக சேமிக்கப்படும் தகவல் கிடங்கில் இருந்து எந்த ஒரு குறிப்பிட்ட தகவலையும் நொடிப்பொழுதில் எடுத்துவிட கணினி உதவுகிறது. இவ்வாறாக தகவலை சேமித்துவைப்பதற்காக, கணினிகளில் இரண்டுவகையான நினைவகங்கள் உள்ளன. அவை
1. தற்காலிக நினைவகம் – Temporary Memory area
2. நிலையான நினைவகம் – Permanent Memory area
என்று அழைக்கப்படுகின்றன
நிலையான நினைவகம் – Permanent Memory area
நிலையான சேமிப்பு கருவிகளாக நாம் Hard Disk, floppy disk,
CDROM போன்றவற்றைப் பயன்படுத்துகிறோம். இவற்றில் சேமிக்கப்படும் தகவல்களை எப்பொழுதுவேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளும் அளவிற்கு நிலையானவை.
CDROM போன்றவற்றைப் பயன்படுத்துகிறோம். இவற்றில் சேமிக்கப்படும் தகவல்களை எப்பொழுதுவேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளும் அளவிற்கு நிலையானவை.
கணினியில் நாம் எந்த ஒரு வேலையைச் செய்யவேண்டுமென்றாலும் அவ்வேலையைச் செய்வதற்கு என ஒரு மென்பொருளைப் பயன்படுத்தவேண்டுமென்பது (அல்லது செயலியை) உங்களுக்குத்தெரியும். எடுத்துக்காட்டாக நான் ஒரு கடிதம் தயார் செய்ய வேண்டும் என்றால், என்னிடம் Ms-Word போன்ற மென்பொருளும், படம் வரைய CorelDraw போன்ற மென்பொருள் என ஒவ்வொரு வேலைக்கும் ஒரு மென்பொருள் அவசியமாகிறது. இத்தகைய மென்பொருள்களும் நமது கணினியில் நிலையாக Hard Disk என்னும் சேமிப்புக்கருவியில் சேமித்து வைக்கப்படவேண்டும் அப்பொழுதுதான் நாம் வேண்டிய நேரத்திற்கு அவற்றை உபயோகிக்க முடியும்.
இத்தகைய மென்பொருள்கள் நாம் ஒரு கட்டளையை கணினிக்கு இட்டால் அது அவ்வேலையை எப்படிச்செய்யவேண்டும் என்ற தகவல்களைத்தந்து உதவுகிறது. எடுத்துக்காட்டாக ஒரு கோப்பை நான் அழிக்க வேண்டும் என்றால் அதற்கான கட்டளையைக் கொடுத்தவுடன் கணினி அந்த கட்டளைக்கான தகவல்கள் எங்கிருக்கின்றன எனத்தேடிக் கண்டுபிடித்து அவற்றில் என்ன எழுதப்பட்டிருக்கிறது.
என்பதைப்படித்து அதன்பின் அதில் கூறப்பட்டுள்ளவாறு நடந்து அந்த கோப்பினை அழிக்கிறது. அதுபோல நான் எழுதியுள்ள ஒரு வரியை சிகப்பு நிறத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும் என்றாலும் நான் எந்த மென்பொருளை அப்பொழுது பயன்படுத்திக் கொண்டிருக்கிறேனோ அந்த மென்பொருளில் இருந்து சிகப்பு நிறத்திற்கு ஒரு வரியை மாற்ற என்ன செய்யவேண்டும் என்பதைப்படித்து அவ்வாறு செய்து அதன் நிறத்தை மாற்றுகிறது ஆக எந்த ஒரு கட்டளையானாலும் அந்த கட்டளைக்கான, அதை நிறைவேற்றுவதற்கான தகவல்கள் நமது கணினியில் மென்பொருளாக ஏற்றப்பட்டிருக்கவேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் தாங்கள் கொடுக்கும் கட்டளைக்காண தகவலைத்தேடிவிட்டு இது செல்லத்தக்க கட்டளை இல்லை என்று கூறிவிடும்.
பொதுவாக இத்தகைய மென்பொருள்களைக் Hard Disk என்னும் சேமிப்பு கருவியில் தான் சேமித்துவைக்கிறோம். நாம் தரும் ஒவ்வொரு கட்டளைக்கும் கணினி தேவையான தகவல்களை hard diskல் இருந்து எடுத்துக்கொண்டிருக்க முடியாது அவ்வாறாக அது ஒவ்வொரு கட்டளைக்கும் hard diskஐப் பயன்யடுத்தி அதனுள் இருந்து அந்த கட்டளைக்கு என்ன செய்யவேண்டும் என்ற தகவலை எடுத்து அதன்படி நடக்க வேண்டும் என்றால் இது மிக அதிக நேரம் எடுத்துகொளளக் கூடியது ஏனெனில் hard disk ல் தட்டுகளில் தகவல்கள் சேமிக்கப்படுகின்றன அவற்றை எடுப்பதற்கு அந்த தட்டுகள் சுற்றப்பட்டு அதில்
சரியான தகவல் சேமிக்கப்பட்டுளள பகுதியில் சென்று தகவலை எடுத்துத்தர கூடுதல் நேரம் எடுத்துக்கொள்ளும் கணினியும் மிகமெதுவாகவே செயல்படும்.
சரியான தகவல் சேமிக்கப்பட்டுளள பகுதியில் சென்று தகவலை எடுத்துத்தர கூடுதல் நேரம் எடுத்துக்கொள்ளும் கணினியும் மிகமெதுவாகவே செயல்படும்.
தற்காலிக நினைவகம் – Temporary Memory area
இத்தகைய சிரமங்களைத் தவிர்த்தல் பொருட்டு நாம் எந்ததெந்த மென்பொருள்களைப் பயன்படுத்திக்கொண்டிருகிறோமோ அந்த மென்பொருள் மொத்தத்தையும் வேறு ஒரு மின்னனு பதிவுக்கருவிக்கு தற்காலிகமாக சேமித்து வைத்துக்கொண்டு எப்பொழுதெல்லாம் தகவல் தேவைப்படுகிறதோ அப்பொழுதெல்லாம் கணினி அந்த மின்னனுக்கருவியிலிருந்து எடுத்துப் பயன்படுத்திக்கொள்ள வழிசெய்யப்பட்டுள்ளது. அத்தகைய மின்னனுக்கருவி நமது
கணினியின் Microprocessor களின் வேகத்துக்கு ஈடுகொடுத்து தன்னுள் சேமிக்கப்பட்டுள்ள தகவல்களைத் தரவல்லவை. இக்கருவியே (இராம்) RAM என்று அழைக்கப்படுவதாகும்.
கணினியின் Microprocessor களின் வேகத்துக்கு ஈடுகொடுத்து தன்னுள் சேமிக்கப்பட்டுள்ள தகவல்களைத் தரவல்லவை. இக்கருவியே (இராம்) RAM என்று அழைக்கப்படுவதாகும்.
இந்த வகைச் சேமிப்பு கருவிகள் மின்சார இணைப்பு இருக்கும் வரைக்கும் இயங்கும், மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டால் அதில் சேமிக்கப்பட்டுள்ள தகவல்கள் அழிந்துபோய்விடும் அதனால் தான் இதனை தற்காலிக சேமிப்பு பகுதி என்று கூறுகிறோம்.
பொதுவாகவே எந்த ஒரு மென்பொருளையும் நீங்கள் இயக்கினால் சில மணித்துளிகள் கழித்தே அவை இயங்க ஆரம்பிக்கும் அக்கால இடைவெளியில் கணனியில் நாம் இயக்கும் மென்பொருளின் அனைத்து வேண்டிய தகவல்களும் (இராம்)RAM என்னும் இடத்திற்கு எடுத்துச்செல்லப்படுகினறன. அதன்பிறகு எந்த ஒரு கட்டளையை நீங்கள் இட்டாலும் அது உடனே அதனை நிறைவேற்றுவதைப் பார்க்கமுடியும். (நீங்கள் Ms-word, excel போன்ற மென்பொருளை இயக்கிப்பாருங்கள்).
அடுத்து அந்த மென்பொருளை விட்டு வெளியேரும் பொழுது அந்த மென்பொருள் சம்பந்தப் பட்ட அனைத்து தகவல்களும் RAM நினைவில் இருந்து அகற்றப்பட்டு வேறு ஏதாவது செயலிக்குள் நுழைதால் அவை உடனே அதில் ஏற்றப்படும்.
இத்தகைய RAM நினைவகத்தின் கொள்ளளவு Byte என்னும் அளவீட்டால் குறிக்கப்படுகிறது ஒரு Byte இடத்தில் ஒரு எழுத்தை நாம் சேமிக்க முடியும்.
1024 Byte கள் சேர்ந்து அது – 1 kilo byte (KB)
1024 KB கள் சேர்ந்து அது – 1 Mega byte (MB) என்றும் அழைக்கப்படுகின்றன.
1024 MB கள் சேர்ந்து 1GB ஆகும்.
1024 KB கள் சேர்ந்து அது – 1 Mega byte (MB) என்றும் அழைக்கப்படுகின்றன.
1024 MB கள் சேர்ந்து 1GB ஆகும்.
பிற்குறிப்பு: தற்போதைய கணினிகளில் நவீனமாக DDR Ram பயன்படுத்தப்படுகின்றன.
No comments:
Post a Comment