இணையத்தில் Youtube பற்றி தெரியாதவர்கள் இருக்கவே முடியாது. Youtube என்பது ஆன்லைனில் வீடியோக்கள் பகிரும் தளமாகும். இதில் பல ஆயிரகணக்கான வீடியோக்கள் குவிந்து கிடக்கின்றன. இதில் நல்ல தரமான வீடியோக்களும் மற்றும் தரம் குறைந்த வீடியோக்களும் கலந்து இருக்கும்.
- இதற்காக எந்த மென்பொருளும் உபயோகிக்க தேவையில்லை.
- முதலில் நீங்கள் Youtube தளத்திற்கு செல்லுங்கள்.
- உங்களுக்கு youtube தளம் திறந்தவுடன் அங்கு உள்ள Search பாரில் உங்களுக்கு தேவையான வீடியோவுக்கு சம்பந்தமான வார்த்தையை கொடுக்கவும்.
- இது நாம் அனைவரும் செய்யும் முறை. அந்த வார்த்தையை கொடுத்து சர்ச் செய்தால் அனைத்து தரமுள்ள வீடியோக்களும் கலந்து வரும்.
- இதில் தரம் மிகுந்த(High Quality) வீடிக்களை மட்டும் தனியே பிரிக்க நீங்கள் கொடுத்த வார்த்தைக்கு பக்கத்தில் '&fmt=18' (Stereo, 480 x 270 resolution) இந்த வரியை கொடுக்கவும்.
- அல்லது '&fmt=22' (Stereo, 1280 x 720 resolution) இந்த வரியை கொடுக்கவும். கீழே உள்ள படத்தில் பாருங்கள்
No comments:
Post a Comment