Friday, February 25, 2011

இணையத்தொடர்பின் போது F1 Key அழுத்தாதீர்கள்! ஆபத்து!







மைக்ரோசாப்ட் நிறுவனம் அண்மையில் ஓர் எச்சரிக்கையை விடுத்துள்ளது. மைக்ரோசாப்ட் விண்டோஸ் 2000, எக்ஸ்பி சிஸ்டங்களில் ஒன்றை இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 7 அல்லது 8 சேர்த்துப்பயன்படுத்துபவர்கள் எப்1 கீ எனப்படும் ஹெல்ப் கீயை அழுத்தினால், ஹேக்கர்கள் எளிதாக கம்ப்யூட்டர்களில் புகும் வாய்ப்பு உண்டு என்று அறிவித்துள்ளது.

இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் உள்ள, விசுவல் பேசிக் கோடில் அமைந்த வரிகளில் உள்ள சிறு பிழையை ஹேக்கர்கள் பயன்படுத்த முடியும். ஏதேனும் ஒரு பாப் அப் விண்டோவினைத் திறந்து, உதவிக்கு F1 கீயினை அழுத்துமாறு ஹேக்கர்கள் வடிவமைத்திருப்பார்கள். அவ்வாறு அழுத்துகையில், அவர்கள் வேறு ஒரு இணையப் பக்கத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து மோசமான புரோகிராம் வரிகள் வழியாக, கம்ப்யூட்டரின் கட்டுப்பாடு ஹேக்கர்களின் கைகளுக்குச் சென்றுவிடும். இவ்வளவும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்புகளில் உள்ள பிழைஉள்ள தொகுப்பு வரிகளே காரணமாகும். இது குறித்த எச்சரிக்கையை மைக்ரோசாப்ட் வழங்கியுள்ளது. யாரும் இது போல பாப் அப் விண்டோ எச்சரிக்கையைத் தொடர்ந்து F1 கீயை அழுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளது.

No comments:

Post a Comment